Published : 19 Apr 2020 08:17 AM
Last Updated : 19 Apr 2020 08:17 AM
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தப்லீக் ஜமாத்தாருடன் சமூகஇடைவெளியை கடைப்பிடிக்குமாறு பாஜக எம்எல்ஏ கூறிய கருத்து சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
உ.பி.யின் மேற்கு பகுதியில் உள்ள பாக்பாத்தின் சப்ரவுலி தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் சாஹேந்திரா சிங்
சவுகான். இவர் தனது முகநூலில் தம் தொகுதிவாசிகளுக்காக ஒருவீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “எனது தொகுதியில் தப்லீக்-எ-ஜமாத்திற்கு சென்று வந்தவர்களில் சிலருக்குகரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த அவர்களுடன் மட்டும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தொகுதிவாசிகள் விழிப்புணர்
வுடன் இருக்கும்படி வேண்டுகிறேன். இவர்களுக்காக உணவுவழங்கவும், வங்கி பரிவர்த்தனைகளுக்காகவும் தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். இதனால், மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் பாதுகாக்க முடியும்” என கூறியிருந்தார்.
இந்நிலையில், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை விலக்கி வைக்கும்படி சவுகான் கூறியிருப்பதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
விளக்கம்
இதுகுறித்து சாஹேந்திரா சிங் சவுகான் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, “டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்ததால், கரோனோ பாதித்த தப்லீக் ஜமாத்தாருடன் மட்டும் எனக் குறிப்பிட்டுள்ளேன். இவர்கள் சார்ந்த முஸ்லிம் சமுதாயத்தினர் அனைவருடனும் என நான் பொதுவாகக் கூறவில்லை. எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விமர்சனங்கள் எழுகின்றன” என்றார்.
இதற்கான விளக்கத்தை மீண்டும் வீடியோ பதிவு செய்து முகநூலில் பதிவேற்றம் செய்ய உள்ளதாகவும் சவுகான் தெரிவித்துள்ளார். அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியில் இருந்து பாஜகவுக்கு சென்றதால் சிலர் தனது பதிவை தவறான நோக்கத்துடன் பிரச்சாரம் செய்து பரப்புவதாகவும் சவுகான் புகார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT