Published : 18 Apr 2020 09:27 PM
Last Updated : 18 Apr 2020 09:27 PM

கரோனா பரிசோதனைக்கு 3 லட்சம் ரேபிட் கிட்கள்: சீனாவில் இருந்து விமானம் புறப்பட்டது

புதுடெல்லி

3 லட்சம் ரேபிட் கிட்களுடன் ஏர் இந்தியா விமானம் சீனாவில் இருந்து புறப்பட்டுள்ளது.

கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிசிஆர் எனப்படும் கிட் மூலம் பரிசோதனை முடிவுகள் வர நாள் கணக்கில் ஆகிறது. அதனால், அறிகுறி தெரியாத வீடுகளில் இருக்கும் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் இந்த நோய் சமூகப்பரவல் நிலையை அடையாமல் இருக்க ரேபிட் டெஸ்ட் கிட் எனப்படும் விரைவு சோதனை கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இதில், பரிசோதனை முடிவுகள் 15 நிமிடத்திற்குள்ளாகவே முடிவுகள் கிடைக்கும். ஒரு நாளைக்கு நிறைய பேரின் ரத்த மாதிரிகளை சோதனை செய்யலாம். ஆனால், இது மட்டுமே இறுதியான கரோனா பரிசோதனை முடிவு இல்லை.

ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மீண்டும் பிசிஆர் எனப்படும் கிட் மூலம் பரிசோதனை செய்யப்படும்.

சீனாவில் இருந்து விரைவான ‘கரோனா’ பரிசோதனைக்காக 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் தமிழகம் வந்தது. மாநில சுகாதாரத்துறை, அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் இந்த ரேபிட் டெஸ்ட் ‘கிட்’களை விநியோகம் செய்தது. இதில், ‘ரெட் அலர்ட்’ பட்டியலில் இருக்கும் மாவட்டங்களுக்கு கூடுதலாக இந்த டெஸ்ட் கிட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கூடுதலாக ரேபிட் டெஸ்ட் கிட்கள் வாங்க ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கான கருவிகள் சீனாவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

இதனை கொண்டு வருவதற்காக டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பி-787 விமானம் சீனாவின் குவாங்செய்க்கு புறப்பட்டுச் சென்றது. இந்த நிலையில் மொத்தம் 3 லட்சம் ரேபிட் கிட்களுடன் ஏர் இந்தியா விமானம் இந்தியா புறப்பட்டுள்ளதாக இந்தியத் தூதர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x