Published : 18 Apr 2020 03:21 PM
Last Updated : 18 Apr 2020 03:21 PM
மும்பையில் கரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தடுத்து வைக்கப்பட்ட பகுதிக்குள் காய்கறி விற்கச் சென்ற பெண்ணை போலீஸார் தடுத்து நிறுத்தியபோது கைகலப்பு ஏற்பட்டது.
இந்தியாவில் அதிகரி்த்து வரும் கரோனா வைரஸின் தாக்கத்தால், கடந்த 24 மணிநேரத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்துவிட்டது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தகவல் தெரிவிக்கிறது.
குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 194 ஆக நேற்று இருந்த நிலையில், இன்று 201 ஆக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில் மும்பையில் மேன்குர்த் பகுதியிலும் கரோனா அதிகஅளவில் பரவி வருகிறது. இதனால் அந்த பகுதி முடக்கி வைக்கப்பட்டுள்ளது. வெளியாட்கள் உள்ளே செல்லவும், அவர்கள் வெளியே வரவும் போலீஸார் தடை விதித்துள்ளனர்.
தள்ளுவண்டியில் காய்கறிகளை வைத்து விற்பனை செய்யும் பெண் ஒருவர் அந்த பகுதிக்கு வந்தார். அவர் உள்ளே செல்ல முற்பட்டபோது போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் அந்த வண்டியை தள்ளி விட்டனர். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#WATCH Mumbai: A scuffle broke out between a hawker and police personnel yesterday after she was not allowed to sell vegetables in a containment area in Mankhurd. A case has been registered in the matter by police. (Source - Amateur video) #Maharashtra #CoronaLockdown pic.twitter.com/NGhaUypxIx
— ANI (@ANI) April 18, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment