Published : 17 Apr 2020 09:36 PM
Last Updated : 17 Apr 2020 09:36 PM
கரோனா தொற்று குறித்து அமைச்சர்களின் 12வது கூட்டம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தலைமையில் நிர்மான் பவனில் இன்று காணொளிக் காட்சி மூலம் நடந்தது.
ஊரடங்கு தாக்கம் பற்றியும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றியும் அமைச்சர்கள் குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
கரோனா நோயைக் கண்டறிதல், தடுப்பூசி மருந்துகள், ரசாயன மருந்துகள், மருத்துவ சாதன உதிரி பாகங்கள் மற்றும் பொதுவான சுகாதாரம் குறித்த விஷயங்களில் அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிலையங்களின் முயற்சிகள் பற்றி அமைச்சர்களின் குழு ஆய்வு நடத்தியது.
அறிவியல் தொழில்நுட்பத் துறை, உயிரி தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்), அணுசக்தித் துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை ஆகியவை இணைந்து கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுப்பது என முடிவெடுக்கப்பட்டது.
* 30 நிமிடங்களில் பரிசோதனை முடிவைத் தெரிவிக்கும் வகையிலான துரித மற்றும் துல்லியமான நோய் கண்டறியும் முறைகளை உருவாக்குதல்;
* தங்களின் 30 மருத்துவப் பரிசோதனை நிலையங்களின் மூலம் பரிசோதனைத் திறன்களை மேம்படுத்துதல்;
* பரிசோதனை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு, தொகுப்பாக்கும் புதிய உத்திகளை உருவாக்குதல்;
* பரிசோதனை சாதனங்களின் தொகுப்புகளை உருவாக்கத் தடையாக இருக்கும் முக்கியமான பொருள்களை உள்நாட்டிலேயே உருவாக்குதல்;
* நச்சுயிரி துறையில் உதவிகரமாக இருக்கவும், நோய்க் கிருமிகள் அதிகரிப்பை அடையாளம் காணவும் வைரஸ் செயல்பாடுகளை வரிசைமுறைப்படுத்தல் திறன்களை அதிகரித்தல்;
ஆர்.என்.ஏ. அடிப்படையிலான தடுப்பூசிகள், நோய் எதிர்ப்பு அணுக்கள் முதல் முக்கிய ஆன்டிஜென்கள் வரையிலான முயற்சிகள் மூலம், வைரஸ்களை செயலிழக்கச் செய்தல்.
உள்ளிட்ட முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT