Published : 17 Apr 2020 05:36 PM
Last Updated : 17 Apr 2020 05:36 PM
காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச்சட்டையில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இன்று பிற்பகல் கிஷ்த்வார் மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையும் முடிவுக்கு வந்தது. இதில் 2பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், போர்நிறுத்த விதிகளை மீறி எல்லையில் ஷெல் தாக்குதலை நடத்திவரும் பாக். ராணுவத்தையும் இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.
டச்சன் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு குறித்து காஷ்மீர் காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
கிஷ்த்துவார் மாவட்டத்தில் புதன்கிழமை தீவிரவாதிகள் சிலர் டச்சன் பகுதியில் ஒரு போலீஸ் படையினரை கோடரிகளால் தாக்கியதோடு இரண்டு சர்வீஸ் துப்பாக்கிகளாலும் சிதைத்தனர். அதில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்துவிட்டார். மற்றொருவர் காயமடைந்தார்.
போலீஸாரை தாக்கிய தீவிரவாத கும்பலைத் தேடி வந்த பாதுகாப்புப் படையினர் டச்சன் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதிலடி தந்தனர்.
72 மணி நேரத்திற்குள் இரு தீவிரவாதிகளும் அகற்றப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் இருவரும் உள்ளூர்வாசிகள் ஆவர். திருடப்பட்ட ஆயுதங்கள் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டன.''
இவ்வாறு காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காஷ்மீரில் தொடர்ந்து நடைபெற்றுவரும் பல்முனை தாக்குதலுக்கு இந்தியா சளைக்காமல் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. வெவ்வேறு துப்பாக்கிச் சண்டைகளில் இன்று ஒரே நாளில் இதுவரை மொத்தம் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
பாக். ராணுவத்துக்கு இந்தியா பதிலடி
நேற்றிரவு முதல் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களின் மூன்று செக்டர்களில் மக்கள் வாழும் பகுதிகளைக் குறிவைத்து ஷெல் தாக்குதலை நடத்தியதோடு வெள்ளிக்கிழமை காலையும் ராணுவ நிலைகளைக் குறிவைத்தும் தாக்குதலில் ஈடுபட்டது.
ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகளின் மீதும் எல்லையோர கிராமங்களில் மக்கள் வாழும் பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.வெள்ளிக்கிழமை காலை தொடர்ச்சியாக 13-வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் ஷெல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
பூஞ்ச் மாவட்டத்தின் கஸ்பா மற்றும் கிர்னி செக்டர்களில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ஆயுதங்களுடன் துப்பாக்கிச் சூடு நடத்தியதன் மூலம் எல்லையில் தூண்டப்படாத யுத்த நிறுத்த மீறலைத் தொடங்கியது.
இந்த அனைத்து செக்டர்களிலும் பாக். ராணுவம் நடத்திவரும் தாக்குதல்களுக்கு இந்திய இராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதாக பிடிஐக்கு அளித்த பேட்டியில் ராணுவத் தளபதி எம்.எம்.நாரவனே தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT