Published : 17 Apr 2020 12:26 PM
Last Updated : 17 Apr 2020 12:26 PM

பண்ணை வீட்டில் நடந்த ஹெச்.டி.குமாரசாமி மகன் திருமணம் : சமூக விலகல் கடைப்பிடிக்கவில்லையெனில் நடவடிக்கை பாயும் - அதிகாரிகள்

கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி மகன் நிகில் குமாரசாமிக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவரின் மகள் ரேவதிக்கும் திருமணம் பெங்களூருவுக்கு வெளியே உள்ள பண்ணை விட்டில் வெள்ளிக்கிழமையனறு நடந்து முடிந்தது.

பெங்களூருவுக்கு வெளியே ராமநகராவில் ஆடம்பரமாக இவர்கள் திருமணம் நடைபெற்றது. நாடு முழுதும் கரோனா பாதிப்பினால் லாக்-டவுன் இருந்து வரும் நிலையில் பலருக்கும் பொது நிகழ்வுத் திருமணங்கள் மறுக்கப்பட்டு வரும் நிலையில் பாஜக எம்.எல்.ஏ. அன்று கூட்டத்தைக் கூட்டி பிறந்தநாள் கேக் வெட்டுகிறார், இன்று என்னவென்றால் முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகவுடா பேரனுக்கு தடபுடலாக திருமணம் நிகழ்ந்துள்ளது.

கட்டுப்பாடுகளும் லாக் டவுனும் அப்பாவி சாதாரண மக்களுக்குத்தானா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அரசிடமிருந்து முன் அனுமதி பெற்றுத்தான் திருமணம் நடத்தப்பட்டது என்கிறார் குமாரா சாமி.

இதற்காக வரும் கார்களின் எண்களை போலீஸாரிடம் கொடுத்து அந்த கார்கள் மட்டுமே திருமணத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்தத் திருமணத்தை நெருக்கமாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளதாக எடியூரப்பா அரசு தெரிவித்துள்ளது, ஒட்டுமொத்த திருமணமும் வீடியோ பிடிக்கப்பட கோரப்பட்டுள்ளது.

“சமூக விலகல் கடைப்பிடிக்கப்படவில்லை எனில் நடவடிக்கைதான்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

செவ்வாயன்று ட்ரக்குகளில் திருமணத்திற்கான ஏற்பாடுகளுக்காக பண்ணை விட்டுக்கு லாரிகளில் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.

திருமணத்துக்கு முன்பாக குடும்ப மருத்துவர்கள் பலரை ஆலோசித்துதான் திருமணம் நடந்தேறியதாக குமாரசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x