Published : 17 Apr 2020 11:10 AM
Last Updated : 17 Apr 2020 11:10 AM
கரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய சூழலை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது. 2021-22 நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவி்த்தார்
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் மும்பையில் இன்று ஊடகங்களுக்குப் பேட்டி அளி்த்தார். அப்போது அவர் கூறியதாவது
கரோனா வைரஸால் நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகளை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது. கரோனா வைரஸால் ஒட்டுமொத்த மனித சமூகமே பாதிப்படைந்துள்ளது. கடந்த 14-ம் தேதி சர்வதேச நிதியம் உலகப் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை வெளியி்ட்டிருந்தது. உலகப் பெருமந்தத்துக்குப்பின் உலக நாடுகளின் பொருளாதாரம் இந்த ஆண்டில் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கும் என தெரிவித்துள்ளது
மார்ச் 27-ம் தேதிமுதல் நாட்டின் பொருளாதார செயல்பாடுகள் கடுமையாகப் பாதி்க்கப்பட்டுள்ளன. இருப்பின் சில பகுதிகளில் நமக்கு நம்பி்க்கை ஒளி தெரிகிறது. இந்தியாவின் வளர்ச்சி குறித்து நடப்பு ஆண்டில் சர்வதேச நிதியம் வெளியிட்ட கணிப்பில் 1.9சதவீதம் வளர்ச்சி இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. இது ஜி20 நாடுகளிலேயே இந்தியாவின் வளர்ச்சிதான் அதிகபட்சாகும்.
2021-22-ம் நிதியாண்டில் பொருளாார வளர்ச்சி குறித்து சர்வதேச நிதியம் வெளியிட்ட கணிப்பில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மிகப்பெரிய லாக்டவுனால் இந்தியாவுக்கு 9 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்படும் என ஐஎம்எப் தெரிவி்த்துள்ளது.
கரோனா வைரஸால் பாதிப்படைந்த இந்த காலகட்டத்திலும் வங்கிகள் வழக்கம் போல் இயங்குவதற்கு போதுமான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது. கடந்த மார்்ச் மாதத்தில் ஆட்டோமொபைல் உற்பத்தி, விற்பனை குறைந்துள்ளது, மின்தேவையும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது
கரோனா வைராஸால் உலகளவில் ஏற்பட்ட பாதிப்பால் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் 34 சதவீதம் குறைந்தது, கடந்த 2008-ம் ஆண்டுக்குப்பின் மோசமான சூழலை எட்டியுள்ளது. லாக்டவுன் காரணமாக நாட்டில் பொருளாார செயல்பாடுகள் தேக்கமடைந்துள்ளன
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால் வங்கிகளில் ரொக்கப்பணத்தின் கையிருப்பு அதிகரித்துள்ளது. நபார்டு வங்கி, இந்திய சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கி, தேசிய வீ்்ட்டுவசதி வங்கி போன்றவற்றுக்கு பொருளாதார செயல்பாடுகளை ஊக்குவிக்க ரூ.50 ஆயிரம் கோடி சிறப்பு நிதியாகவழங்கப்படும்.
கடனுக்கான வட்டிவீதத்தில் எந்த வீதத்திலும் மாற்றமில்லை, ஆனால் ரிவர்ஸ் ரெப்போ வட்டி வீதம் 4 சதவீதத்திலிருந்து 3.75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT