Published : 17 Apr 2020 07:42 AM
Last Updated : 17 Apr 2020 07:42 AM
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த, 108 நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மாத்திரைகளை இந்தியா அனுப்பி உள்ளது. மேலும், பல நாடுகளுக்கு அனுப்பி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸுக்கு சரியான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் மலேரியா காய்ச்சலுக்கு வழங்கப்படும், ஹைட்ராக்ஸிகுளோரோகுவின் மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த மாத்திரைகளை வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி, மருந்து ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு இந்தியா அனுப்பியது. இதுபோல் கடந்த 2 வாரங்களில் மட்டும் 108 நாடுகளுக்கு இந்த மாத்திரையை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இதுவரை 8.5 கோடி மாத்திரைகளை இந்தியா அனுப்பி உள்ளது. அத்துடன் 50 கோடி பாராசிட்டமால் மாத்திரைகளையும் அனுப்பி உள்ளது. இதற்கான ஒப்புதலைப் பிரதமர் மோடி வழங்கி உள்ளார். இதன்மூலம் உலகளவில் இந்தி
யாவின் செயல்பாடு பாராட்டு பெற்று வருகிறது.
தற்போது உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளதால், மாத்திரைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பு
வதில் சிக்கல் நிலவுகிறது. எனினும், இந்திய விமானப் படை விமானங்கள், சிறப்பு விமானங்கள் மூலம் மாத்திரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதில் அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ், ஸ்பெயின், நெதர்லாந்து, இத்தாலி, சுவீடன், சிங்கப்பூர் ஆகிய நாடு
களும் அடங்கும். மொரீஷியசுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மாத்திரை பரிசாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு மாத்திரை அனுப்பி வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT