Published : 17 Apr 2020 06:41 AM
Last Updated : 17 Apr 2020 06:41 AM

பொருளாதாரத்தை ஊக்குவிக்க 2-ம் கட்ட சலுகைகள் பிரதமருடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை- ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகிறது

புதுடெல்லி

கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப் படுத்துவதற்காக மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் அனைத்து துறைகளும் மிகப்பெரும் தேக்க நிலையைச் சந்தித்துள்ளன. நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் மிகப்பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் பொருளாதாரத்தை ஊக்குவிக்க இரண்டாம் கட்ட சலுகைகளை வழங்குவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி யுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள தால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை எதிர்கொள்ள வசதியாக ஏற்கெனவே ரூ. 1.76 லட்சம் கோடிக்கு சலுகைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஆனாலும் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக முதல் கட்ட சலுகைகள் போதுமானதாக இருக்காது என பல்வேறு துறையினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பொருளாதாரச் சூழலை எதிர்கொள்ள சலுகைகளை தாராளமாக வழங்குங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி உட்பட அனைத்து கட்சியினரும் வலியுறுத்தி உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, நேற்று பிற் பகலில் பிரதமர் நரேந்திர மோடியை மத் திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இரண்டாவது கட்டமாக பொருளாதார சலுகைகளை அறிவிப்பது தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக அதிகாரி கள் தெரிவித்தனர். ஏறக்குறைய 3 மணி நேரத்துக்கும் மேலாக இந்த ஆலோசனை நடைபெற்றது.

கடந்த சில நாட்களாகவே நிதி அமைச்சக அதிகாரிகள் இரண்டாம் கட்ட சலுகை அளிப்பது தொடர்பாக ஆலோ சனை நடத்தி அது தொடர்பான விரிவான அறிக்கையை நிதி அமைச்சரிடம் அளித்துள்ளதாகத் தெரிகிறது.

எந்தெந்த துறைகளுக்கு சலுகை கள் வழங்கலாம் என்பது தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கை அடிப்படையில் பிரதமரிடம் நிதி அமைச்சர் ஆலோசனை நடத்தி இறுதியில் முடிவு எடுத்து அறிவிப்பார் என்று தெரிகிறது.

பெரிய நிறுவனங்களுக்கான சலுகை கள், வரிச் சலுகைகள், குறைந்த வட்டியில் கடன் வசதி உள்ளிட்ட சலுகைகள் இதில் இடம்பெறும் என்று தெரிகிறது. குறிப்பாக துறை வாரியாக இந்தச் சலுகைகள் இருக்கலாம் என்றும் நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி கிடைக்க வசதியாக நிதியம் ஒன்றை உருவாக்குவது குறித்து மத்திய நிதி அமைச்சர் ஆலோசனை நடத்தி யுள்ளார்.

இதனால் அனைத்து துறைகளுக்கும் ஒரே சலுகை திட்டமா அல்லது இரண்டு மூன்று பிரிவுகளாக பிரித்து சலுகைகளை அறிவிக்குமா என்பது தெளிவாக தெரியவில்லை. அதேசமயம் இது இறுதியான சலுகையாக இருக்காது என்றும் தேவைக்கேற்ப அடுத்தடுத்து சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x