Published : 16 Apr 2020 03:51 PM
Last Updated : 16 Apr 2020 03:51 PM

லாக்டவுன்: செல்போன்களில் இலவச அழைப்புகள், டேட்டா பயன்பாடு வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி

லாக்டவுனின்போது வாடிக்கையாளர்களுக்கு செல்ஃபோனில் இலவச அன்லிமிடெட் அழைப்புகள், டேட்டா பயன்பாடு ஆகியவற்றை வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஏப்ரல் 14 வரை திட்டமிடப்பட்ட நாடு தழுவிய லாக்டவுன் மே 3 வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலைக்குச் செல்லமுடியாத நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 அளித்தல், பொதுமக்கள் வெளியே வராமலிருப்பதை உறுதிசெய்ய வீடு தேடிச் சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் என முக்கியமான சலுகைகள் பலவற்றை பல்வேறு மாநிலங்களும் மக்களுக்கு வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு கடன் தவணைகள் செலுத்துவதற்கான அவகாசம் அளித்தல் உள்ளிட்ட பல்வேறு கடன், வட்டி சலுகைகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் மக்களுக்கு வீட்டு மின்கட்டணம் ரத்துசெய்யவும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வரும் சூழ்நிலையில் தற்போது லாக்டவுன் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதை அடுத்து செல்போன் வாடிக்கையாளர்களுக்கு இலவச அன்லிமிடெட் அழைப்புகள், டேட்டா பயன்பாட்டு வசதிகளை வழங்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டுமெனக் கோரி வியாழக்கிழமை உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கறிஞர் மனோச்சார் பிரதாப் தாக்கல் செய்த இந்த மனுவில், ''வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவச மற்றும் வரம்பற்ற அழைப்பு மற்றும் தரவு பயன்பாட்டு வசதிகளை வழங்க வேண்டும். இதன் அடிப்படையில் ஓர் ஒருங்கிணைந்த உரிமத்திற்கான பொருத்தமான ஒப்பந்த விதிமுறைகளை கோருவதற்கும் மத்திய அரசிற்கு வழிகாட்டுதல்களை அளிக்க வேண்டும்'' என்று கோரப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x