Published : 16 Apr 2020 12:07 PM
Last Updated : 16 Apr 2020 12:07 PM
புனே நகரில் இன்று காலை கடும் கட்டுப்பாடுகளையும் மீறி வெளியே சுற்றித்திரிந்தவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார் சாலையிலேயே யோகாசனம் செய்ய வைத்த காட்சி வைரலாகி வருகிறது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 3-ம் தேதி வரை தற்போது ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நடவடிக்கைகளை பாதுகாப்புடன் தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. எனினும் மக்கள் கட்டுப்பாடுகளை மீறி வெளியே வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
#WATCH Maharashtra: Police made people, who violated lockdown for a morning walk, perform yoga in Bibvewadi area of Pune, early morning today. #CoronavirusLockdown pic.twitter.com/m5ooX6ixaN
— ANI (@ANI) April 16, 2020
இந்தநிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் இன்று காலை கடும் கட்டுப்பாடுகளையும் மீறி ஏராளமானோர் சுற்றித்திரிந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார் சாலையிலேயே யோகாசனம் செய்ய வைத்தனர். இந்த காட்சி வைரலாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT