Published : 16 Apr 2020 10:42 AM
Last Updated : 16 Apr 2020 10:42 AM
சுற்றுலா அமைச்சகத்தின் "உங்கள் தேசத்தை தெரிந்து கொள்ளுங்கள்" (தேக்கோ அப்னா தேஷ்) என்ற வலைதள தொடருக்கு ஊரடங்கின் போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த தொடர் பல்வேறு இடங்களின் தகவல்கள் குறித்து தெரிவிப்பதுடன், நமது இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் பற்றிய தகவல்களை விரிவாகவும் ஆழமாகவும் விவரிக்கிறது.
நேற்று ஒளிபரப்பப்பட்ட தொடரின் ஒரு பகுதி, டெல்லியின் நீண்ட வரலாற்றை அறிமுகப்படுத்தியது. அத்தொடர் நகரங்களின் நகரம், டெல்லியின் தனிப்பட்ட நாட்குறிப்பு என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இதற்கு 5700 பதிவுகளுடன் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த தொடரின் முக்கிய அம்சம் சுற்றுலா விழிப்புணர்வு மற்றும் சமூக வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது.
கீழேயுள்ள இணையத்தின் மூலம் அத்தொடரை முழுமையாகக் காணலாம். https://youtu.be/LWlBc8F_Us4.
டெல்லியை பற்றிய இந்த தொடரின் வெற்றிக்குப் பிறகு, இரண்டாவது "உங்கள் தேசத்தை தெரிந்து கொள்ளுங்கள்" (தேக்கோ அப்னா தேஷ்) வலைதள தொடர் இன்று ஏப்ரல் 16ம் தேதி காலை 11:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை ஒளிபரப்பாகும். இத்தொடர் ‘கொல்கத்தா - கலாச்சாரம் ஒரு சங்கமம்’ என்ற பெயரில் கொல்கத்தா பற்றி அறியும் ஒரு வாய்பை மக்களுக்கு வழங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT