Published : 15 Apr 2020 07:15 AM
Last Updated : 15 Apr 2020 07:15 AM
தேசிய அளவிலான ஊரடங்கு மே மாதம் 3-ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அதுவரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மார்ச் 20-ம் தேதி முதல், பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதுபோல் திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் சுவாமி தரிசனம்ரத்து செய்யப்பட்டது. எனினும் இக்கோயில்களில் ஆகம விதிகளின்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தேசிய அளவிலான ஊரடங்கை மே 3-ம் தேதி வரை நீட்டிக்கும் அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார். இதையடுத்து ஏழுமலையான் கோயில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், நிவாச மங்காபுரம் பெருமாள் கோயில் என திருமலை திருப்பதிதேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் மே 3-ம் தேதி வரை பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
473 பேருக்கு கரோனா தொற்று
ஆந்திர மாநிலத்தில் இதுவரை473 பேருக்கு கரோனா வைரஸ்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் அதிகபட்சமாக குண்டூர் மாவட்டத்தில் 109 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுபோல் கர்னூல்(91), கிருஷ்ணா (44) உள்ளிட்ட மாவட்டங்களில் நோய்த் தொற்றுஏற்பட்டுள்ளது. இதுவரை 9 பேர்இந்த நோய்த் தொற்றால் இறந்தனர். காகுளம் மற்றும் விஜயநகரம் மாவட்டத்தில் இதுவரை எவரும் பாதிக்கப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT