Published : 14 Apr 2020 06:11 PM
Last Updated : 14 Apr 2020 06:11 PM

இதுவரை இல்லாதது; இந்தியாவில் ஒரே நாளில் 1463 பேருக்கு கரோனா தொற்று; மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது

புதுடெல்லி

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 1463 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத ஒன்றாகும்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 1463 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இந்த எண்ணிக்கையை தொட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத ஒன்றாகும். ஒரே நாளில் 29 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 10815 ஆக உயர்ந்துள்ளது. இதில் 9272 பேருக்கு கடுமையான தொற்று ஏற்பட்டுள்ளது. 1190 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 353 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x