Published : 14 Apr 2020 09:34 AM
Last Updated : 14 Apr 2020 09:34 AM

ஏழை மக்களின் அவதி: கலங்க வைக்கும் வீடியோ; சாலையில் சிந்திய பாலுக்காகப் பறக்கும் மனிதனும் தெரு நாய்களும் 

ஒரு புறம் மருந்தில்லா கரோனா நோயைக் கட்டுப்படுத்த லாக்-டவுன் அவசியம் என்றாலும் அது ஏலாதவர்களையும் ஏழைகளையும் கடுமையாகப் பாதிப்பதையும் மறுப்பதற்கில்லை, ஆங்காங்கே ஒரு பிடி சோறுக்காக அலையும் மக்கள் இருக்கவே செய்கின்றனர். அதில் ஒருசிலதான் நம் பார்வைக்கு வருகிறது.

இந்த வகையில் வயிற்றைக் கலக்கும் ஒரு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆக்ராவில் சாலையில் சிந்திய பாலுகாக ஆலாய்ப் பறக்கும் ஒரு மனிதன் மற்றும் தெருநாய்கள் பற்றிய வீடியோவாகும் இது.

இன்று காலை ஆக்ராவில் உள்ள ராம் பாக் சவ்ராஹா சாலையில் பால் கொண்டு செல்லும் பெரிய கன்டெய்னர் வாகனம் ஒன்று கவிழ்ந்ததில் கொள்கலனிலிருந்து பால் சாலையில் ஓடியது. தாஜ்மஹாலிலிருந்து 6 கிமீ தொலைவில்தான் இது நடந்துள்ளது.

பால் சாலையில் ஓடியதுதான் விஷயன் ஒரு நபர் பாலை கைகளால் பானை போன்ற ஒன்றில் அள்ளி அள்ளி ஊற்றுகிறார், அவருக்கு அருகில் தெருநாய்கள் பல பாலை நக்கிச் சுவைத்துக் கொண்டிருக்கின்றன.

நாடு முழுதும் லாக்-டவுன் இன்று ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படவுள்ளது, இந்நிலையில் லாக் டவுன் ஆரம்பக் கட்டத்தில் ஏழைத் தொழிலாளர்கள், தினக்கூலிகள் அன்றாடம் உழைத்து பிழைப்பு நடத்தி வருபவர்கள் ஆகியோர் தங்கள் ஊர்களுக்கு கால்நடையாகக் கிளம்பத் தொடங்கினர். 80 கோடி மக்களுக்கு உணவு மானியம் மற்றும் நேரடி பணப்பரிமாற்றம் என்று மத்திய அரசு அறிவித்தது.

ஆனால் இதுவரை இந்தத் திட்டம் சரிவர நடைமுறப்படுத்தப்படவில்லை. அரசு அளிக்கும் நிவாரணங்களைப் பெறுவதில் போட்டாப் போட்டி இருப்பதால் பல இடங்களில் ஏழை மக்கள் போலீசாரிடம் அடி வாங்குவதுதான் மிச்சமாகியுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில்தான் தெருவில் சிந்திய பாலுக்காக மனிதனும் நாயும் ஆலாய்ப்பறக்கும் காட்சி வீடியோவாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

— Kamal khan (@kamalkhan_NDTV) April 13, 2020

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x