Published : 13 Apr 2020 06:37 PM
Last Updated : 13 Apr 2020 06:37 PM

இந்தியாவில் கரோனா பாதிப்பு: தொற்று 9352 ஆக உயர்வு; பலி 324 ஆக அதிகரிப்பு

புதுடெல்லி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 905 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடுமுழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9352 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
‘‘இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 905 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாடுமுழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9352 ஆக உயர்ந்துள்ளது. இதில் 8048 பேருக்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. 980 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணக்கை 324 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x