Published : 13 Apr 2020 07:59 AM
Last Updated : 13 Apr 2020 07:59 AM
சுனாமி, நிலநடுக்கம், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர் காலங் களில் பணியாற்றிய அனுபவத்தை யும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பாராட்டையும் பெற்றவர் ஓய்வுபெற்ற ராணுவ பிரிகேடியர் ஜே.எம்.தேவதாஸ். 150 ஆண்டு பழமையான சீக்கியப் படைப்பிரிவில் முதன் முதலில் கமாண்டரான தமிழர் என்ற பெருமைக்குரிய அவர், மதுரையைச் சேர்ந்தவர். 34 ஆண்டு கால ராணுவப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற இவர், இப்போதும் பேரிடர் மேலாண்மை குறித்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
கரோனா வைரஸ் பரவல் குறித்து அவரிடம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது:
கண்ணுக்குத் தெரியாத வைர ஸாக எதிரி இருப்பதால் நமது போராட்டம் கடுமையாகியிருக் கிறது. அரசு படையுடன், மக்கள் படையும் இணைந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக் கிறது. சுய ஊரடங்கு, நோய்த் தொற்றுள்ளவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல், அனைத்து மக்களையும் பரிசோதித்தல் ஆகிய 4 கட்ட பணிகளை அரசு முன்னெடுக்கிறது. சுய ஊரடங்கு சரியாக கடைபிடிக்கப் பட்டால்தான், மற்ற நான்கு கட்டப் பணிகளும் வெற்றிகரமாக அமையும். மக்கள் வீட்டைவிட்டு வெளியே போகாமல் இருக்க வேண்டும் என்றால், அவர்களின் மிக அத்தியாவசிய தேவையான உணவு, மருந்து போன்றவை தடையின்றி வீட்டிலேயே கிடைக்க வேண்டும்.
இந்த பேரிடர் காலத்தில், முன் னாள் ராணுவத்தினரை கரோனா தடுப்புப் பணியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக இப் போதும் நல்ல உடல்திறனோடு இருக்கிற 40 முதல் 60 வயதுக்கு உட்பட்ட வீரர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஊரடங்கை அமல் படுத்துவதில் ஒவ்வொரு சாலைச் சந்திப்பிலும் நான்கைந்து போலீ ஸாரை குவிக்க வேண்டியதிருப்ப தால், எல்லா இடங்களையும் அவர் களால் கண்காணிக்க முடிய வில்லை. எனவே, ஒவ்வொரு பாயிண்டிலும் ஒரு போலீஸ்காரர், ஒரு முன்னாள் ராணுவ வீரர், ஒரு ஊர்க்காவல் படை வீரர், என்சிசி மாணவர் என்று பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் காவலர் களின் வேலைப்பளுவும் குறையும். அத்து மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு மட்டும் அந்த போலீஸ்காரரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மிலிடரி கேண்டின் இல்லாத ஊர்களில் வசிக்கும் ராணுவ வீரர் களுக்கும், முன்னாள் வீரர்களுக்கும் லாரியில் கொண்டுசென்று பொருட் களை விற்பனை செய்த அனுபவம் ராணுவத்தினருக்கு உண்டு. எனவே, முன்னாள் ராணுவத்தின ரைக் கொண்டு காய்கறி, மளிகைப் பொருட்களை லாரி மூலமாக வீடு வீடாக விற்பனை செய்யச் சொல்லலாம். அவர்களுக்கு உதவி யாக மற்ற தன்னார்வலர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர் களது தொடர்பு எண்ணை மக் களிடம் விளம்பரப்படுத்தி, ஊடரங்கை வெற்றிகரமாக செயல் படுத்த முடியும். இந்த முறையை நகரங்களில் மட்டுமே செயல்படுத்த முடியும். கிராமங்களில், இதுவரை யில் கரோனா தொற்று ஏற்பட வில்லை. இந்தச் சூழலை அப்படியே தக்க வைக்க வேண்டும் என்றால், கிராமங்களுக்கும் நகரங் களுக்குமான தொடர்பைத் துண் டிக்க வேண்டும். ஒவ்வொரு வட் டாரத்திலும் ஐந்தாறு கிராமங்களை மட்டும் ஒன்றிணைத்து, அந்த கிராமங்களுக்குள்ளேயே காய்கறி, பால், பழம் போன்ற அத்தியாவசிய பொருட்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டும். ஊரைவிட்டு வெளி யேறக்கூடாது என்று அறிவிக் கலாம். அதேநேரத்தில், உணவுத் தேவை அல்லது விளைச்சலை வெளிச்சந்தைக்கு அனுப்புவதற்கு எந்நேரமும் உதவ அரசு அதிகாரி கள் தயாராக இருக்க வேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்ட வெளி மாநிலத் தொழிலாளர்கள் சிலர், அவர்கள் தங்க வைக்கப்படிருந்த பள்ளிகளில் இருந்து தப்பிச்சென்று விட்டார்கள் என்று இந்து நாளி தழில் செய்தி வாசித்தேன். அங்கே கழிப்பறை, காற்றோட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததே கார ணம் என்று தெரிகிறது. எனவே, அப் படியான இடங்களுக்கு முன்னாள் ராணுவ வீரர் ஒருவரைப் பயிற்சிக் காக அனுப்பலாம். எல்லையோரங் களில் வெறும் 10க்கு 10 அடி பதுங்கு குழியில் 20 வீரர்கள் இருந்து வேலை பார்த்த அனுபவம் ராணுவத்தினருக்கு உண்டு.
எனவே, ஊருக்கு ஒதுக்குப்புற மாக டெண்ட் அமைப் பது, அருகிலேயே எப்படி வெறு மனே குழிவெட்டி, கோணிப்பை யால் மறைப்பு அமைத்து கழிப் பறையை உருவாக்குவது குறித்து பயிற்சி அளிப்பார்கள். இதன் மூலம் அவர்கள் தங்களுக்குத் தேவையான வசதிகளைத் தாங் களே செய்துகொள்வார்கள். அடுத்தது மிக முக்கியமான விஷ யம். இந்தியாவில் நோய்த்தொற்று குறித்து குடிமக்கள் அனைவருக் கும் பரிசோதனை செய்யும் முறை இதுவரையில் நடைமுறைப்படுத் தப்படவில்லை. இதுகுறித்து நமது பிரதமர் தனியார் ஆய்வக உரிமை யாளர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையின்போது, 'பரி சோதனைக்கு வெறுமனே 400 ரூபாய்தான் ஆகும். ஆனால், ரத்த மாதிரிகளைச் சேகரிப்பதற்கு ஒவ் வொருவருக்கும் சுமார் 1500 ரூபாய்வரையில் செலவாகிறது' என்று ஒரு மருத்துவர் தெரிவித் திருந்தார்.
எனவே, அனைத்து பெட் ரோல் நிலையங்கள், வங்கிகள், ஏடிஎம்கள், காய்கறி சந்தைகள், சாலை சந்திப்புகள் என்று மக்கள் கூடுகிற இடங்கள் அனைத்திலும் ஒரு முகாம் போட்டு, ரத்த மாதிரிகளைச் சேகரிக்க வேண்டும். இந்தப் பணியில் ராணுவ மருத்துவப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற செவிலியர்கள், மருத்துவர்கள், தனியார் துறை செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். நாட்டையும், நாட்டு மக்களையும் காக்க எந்த நேரத்திலும் தயாராக இருப்பவர்கள் முன்னாள் படை வீரர்கள். அவர்களை தமிழக அர சும், மத்திய அரசும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT