Published : 13 Apr 2020 07:57 AM
Last Updated : 13 Apr 2020 07:57 AM

கட்டாய திருமணத்தில் இருந்து தப்பிக்க ஆந்திரா காப்பகத்திலேயே தங்கியிருக்கும் சிறுமி: 75 வயது பாட்டிக்கு கவுன்சலிங்

கட்டாயத் திருமணத்திலிருந்து தப்பிப்பதற்காக சிறுமிகள் காப்ப கத்தில் ஆந்திராவைச் சேர்ந்த 10-வது படிக்கும் சிறுமி தங்கியுள்ளார்.

இதுகுறித்து ஆந்திர மாநில சிறார் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் விஎஸ்வி கிருஷ்ணகுமார் கூறும்போது, “கரோனா பிரச்சினையால் ஊர டங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணா மாவட்டம் மச்சிலிப் பட்டினத்திலுள்ள காப்பகத்தில் தங்கி படித்து வந்த 89 சிறுமிகள் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் ஒரு சிறுமி மட்டும் வீட்டுக்குச் செல் லாமல் காப்பகத்திலேயே தங்கியிருந்தார்.

இதுகுறித்து நான் சிறுமியைச் சந்தித்து கேட்டபோது அவர் சொன்ன விஷயம் என்னை உலுக்கி விட்டது. தனக்கு கட்டாயத் திரு மணம் செய்து வைக்க தனது வீட்டார் முயற்சிப்பதாகவும், அதைத் தவிர்க்க காப்பகத்திலேயே தங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். சிறுமிக்கு பெற்றோர் இல்லை. தனது பாட்டியின் பாது காப்பில் இருக்கிறார்.சில மாதங் களுக்கு முன்பு சிறுமிக்கு நிச்சய தார்த்தமும் முடித்து விட்டார் அந்த பாட்டி.

இந்நிலையில் தனக்கு திரு மணத்தில் விருப்பம் இல்லை என் றும், தொடர்ந்து படிக்கவே விருப் பம் என்றும் தெரிவித்தார். மேலும் பாட்டிக்கு 75 வயதாகி விட்டதாலும், தனக்குப் பிறகு பேத்தியை பார்த்துக் கொள்ள யாரும் இல்லை என்பதாலும் இந்த முடிவை பாட்டி எடுத்துள்ளதாக சிறுமி தெரிவித்தார். ஆனால் தனக்கு குழந்தைகள் திருமணத்தில் விருப் பம் இல்லை என்று அந்த 15 வயது சிறுமி தெரிவித்தார்” என்றார்.

இதையடுத்து மாவட்ட சமூக நலத்துறை அதிகாரியைத் தொடர்புகொண்டு அந்தத் திருமணத்தைத் தடுத்து நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் சிறுமியின் பாட்டிக்கும் கவுன்சலிங் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x