Published : 12 Apr 2020 05:34 PM
Last Updated : 12 Apr 2020 05:34 PM

கரோனா;  ஆராய்ச்சி நிலையில் 40 தடுப்பு மருந்து : மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் தொற்றை தடுக்க 40க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் ஆராய்ச்சி நிலையில் இருப்பதாகவும் ஆனால் எதுவும் அடுத்தநிலைக்கு செல்லவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகள் பலவும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனிடையே கரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளும் ஈடுபட்டுள்ளன. இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலைச் சேர்ந்த மருத்துவர் மனோஜ் முர்கேகர் கூறியதாவது:

‘‘கரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தொடர்ந்து முயன்று வருகிறது. எனினும் இவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றி கிட்டவில்லை. இதுவரை 40-க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் ஆராய்ச்சி நிலையில் உள்ளன. ஆனால் எதுவும் அடுத்தநிலைக்கு செல்லவில்லை.’’ எனக் கூறினார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x