Published : 12 Apr 2020 04:01 PM
Last Updated : 12 Apr 2020 04:01 PM
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 134 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம்,கேரளா, தெலங்கானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா, மத்தியபிரதேசம், கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் தொடக்கம் முதலே கரோனா வைரஸின் தாக்கம் தீவிரமாக உள்ளது.
குறிப்பாக மகாராஷ்டிராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 134 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 1895 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கரோனா தொற்று ஏற்பட்டவர்களில் அதிகபட்சமாக மும்பையில் 113 பேருக்கும், மீரா பாகியேந்தில் 7 பேருக்கும், தானே மற்றும் நவிமும்பையில் தலா 2 பேருக்கும் வாசாய் விரார் மற்றும் பிவாண்டியல் தலா ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT