Published : 12 Apr 2020 02:40 PM
Last Updated : 12 Apr 2020 02:40 PM
ராய்ப்பூர்: சத்திஸ்கரில் மாவோயிஸ்ட் ஆதிக்க பிஜப்பூர் மாவட்டத்தில் போஸ் செய்யப்பட்டிருந்த சத்திஸ்கர் ஆயுதப்படை ஜவான் சந்தோஷ் யாதவ் (30) காடுகளில் மாவோயிஸ்ட்களைத் தேடி பயணித்தப் பணிக்கடினங்களைக் காட்டிலும் தன் தாய் இறந்த செய்தி கேட்டு மிகக்கடுமையான கடினங்களைச் சந்தித்து சுமார் 1100 கிமீ 3 நாட்கள் பயணித்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள சொந்த ஊர் வந்தடைந்தார்.
கரோனா லாக் டவுன் கடினப்பாடுகல் தன் பணிக்கடினப்பாடுகளை விடவும் பயங்கரமானது என்கிறார் சந்தோஷ் யாதவ், “நான் என் தாய் இறந்த செய்தியைக் கேட்டவுடன் எப்படியாவது சிகார் என்ற என்னுடைய கிராம்த்துக்கு வரத்துடித்தேன். என்னுடைய தம்பி மற்றும் திருமணமான சகோதரி மும்பையில் இருக்கின்றனர், அவர்கள் தாயைப் பார்க்க வர வாய்ப்பேயில்லை. ஏனெனில் லாக் டவுன்.
ஆனால் நான் என் தந்தையை இந்த நிலையில் தனியாக விட விரும்பவில்லை” என்றார் இதனையடுத்து சரக்கு ரயில்கள், லாரிகள், படகு, நடை என்றெல்லாம் பல விதமாக கஷ்டப்பட்டு ஊர் வந்து சேர்ந்துள்ளார் சந்தோஷ் யாதவ்.
சந்தோஷ் யாதவ் சத்திஸ்கர் ராணுவப் படையில் 2009-ல் சேர்ந்தார், 15வது பட்டாலியனில் சேர்க்கப்பட்டார். இவர் நக்சல் ஆதிக்க பிஜப்பூர் பகுதியில் ரெகுலரான பணியில் ஈடுபட்டிருந்த போது ஏப்ரல் 4ம் தேதி தந்தையிடமிருந்து அழைப்பு வந்தது. அதாவது தாயின் நிலை மோசமடைந்து விட்டது என்று. வாரனாசி மருத்துவமனையில் சேருங்கள் என்று இவர் தந்தையிடம் கூறினார்.
ஆனால் வாரணாசி மருத்துவமனையில் சேர்த்தும் பயனில்லை அன்று மாலையே தாய் இறந்த செய்தி தந்தையிடம் வந்தது. அழுகையும் வேதனயும் அழுத்த யாதவ் ஏப்ரல் 7ம் தேதி எப்படியாவது ஊர் போய்ச் சேர்ந்து விட வேண்டும் என்று கிளம்பினார்.
“முதலில் மாநிலத் தலைநகர் ராய்ப்பூருக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து எப்படியாவது சென்று விட முடியும் என்று நம்பிக்கை வைத்தேன், முதலில் நெற்பயிர் சென்ற லாரி ஒன்றை பிஜப்பூரிலிருந்து பிடித்து ஜகதல்பூர் வந்தார். அங்கு 2 மணி நேரம் காத்திருந்து மினி லாரி ஒன்றைப் பிடித்து கொண்டகன் என்ற இடத்துக்கு வந்துள்ளார், ராய்ப்பூர் இன்னும் 200 கிமீ.
“கொண்டகனில் போலீசார் என்னை நிறுத்தி விசாரித்தனர், ஆனால் நான் என் நிலையை விளக்கினேன். அங்கு ஒரு அதிகாரி எனக்கு பரிச்சயமானவர் என்பதால் அதிர்ஷ்டவசமாக எனக்கு உதவினார். அங்கு அவர் மருந்துகள் சென்ற ஒரு வாகனத்தில் என்னை ஏற்றிவிட ராய்ப்பூர் வந்து சேர்ந்தேன்.
ராய்ப்பூரிலிருந்து ஆர்பிஎஃப்-இல் பணியாற்றும் என் நண்பனைப் பிடித்து சரக்கு ரயிலைப் பிடித்தேன். சுமார் 8 குட்ஸ் ரயில்களில் பயணித்தேன், சுனார் வந்தடைந்தேன். இங்கிருந்து என் கிராமம் கொஞ்சம் அருகில்தான் இருந்தது. ஏப்ரல் 10ம் தேதி கிராமத்தை அடைந்தேன், அனைத்து ரயில் நிலைய அதிகாரிகளுக்கும் என் நண்பர்களுக்கும் நன்றி” என்றார்.
குட்ஸ் ரயில் பிரயாணம் முடிந்து 5 கிமீ நடந்து கங்கை நதியை அடைந்துள்ளார் அங்கு படகில் நதியைக் கடந்து கிராமம் வந்தடைந்தார்.
பல இடங்களில் என்னை போலீஸார் நிறுத்தினர் ஆனால் மனிதாபிமான அடிப்படையில் என்னை தொடர அனுமதித்தனர் என்ற சந்தோஷ் யாதவ் லாக்-டவுனை குறை கூறாமல் மக்கள் பாதுகாப்பே முக்கியம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT