Published : 12 Apr 2020 12:27 PM
Last Updated : 12 Apr 2020 12:27 PM
கரோனா வைரஸ் நோயாளிகளிடம் இருந்து மாதிரிகளை ேசகரிப்பதற்கு தகுதிவாய்ந்த மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள், ஆதலால், ரெஸிடன்ட் மருத்துவர்கள், காது, மூக்கு,தொண்டை மருத்துவநிபுணர்களின் சேவைகளைக் கேளுங்கள் என்று மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது
கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸ் பரவலின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் 21 நாட்கள் லாக்டவுன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் பாதிப்பும், உயிரிழப்பும் குறையவில்லை.
கரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 273 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 356 ஆகவும் அதிகரித்துள்ளது.
இந்நிைலயில் கரோனா வைரஸ் நோயாளிகளிடம் இருந்து மாதிரிகளை எடுப்பதற்கான போதுமான மருத்துவர்கள் இல்லை என்பதால், காது, மூக்கு, தொண்டை நிபுணர்களின் உதவியைக் கேட்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளின் தலைமைச்செயலாளர்களுக்கும், முதன்மைச் செயாளர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸுக்கு எதிரான போரில் நாடு எப்போதுமில்லாத சூழலைச் சந்தித்து வருகிறது. கரோனா வைரஸுக்கு எதிரான போரில் வெல்லும் நடவடிக்கையில் முக்கியமானது, நோாயாளிகளைக் கண்காணிப்பதும், அவர்களிடம் இருந்து மாதிரிகளை சேகரிப்பதும், ஸ்வாப் மாதிரிகளை சேகரிப்பதாகும்.
இதற்கு அவசரமாக தகுதிவாய்ந்த காது,மூக்கு,தொண்டை மருத்துவ நிபுணர்களும், ரெஸிடென்ட் மருத்துவர்களும் தேவைப்படுகிறரார்கள்.
ஆதலால் ரெஸிடென்ட் மருத்துவர்கள், காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவ நிபுணர்களின் சேவையைப் பெற்று கோவிட்-19 நோயாளிகளிடம் இருந்து மாதிரிகளை சேகரித்து அனுப்புங்கள என அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக்கொள்கிறோம்
மருத்துவக் கல்லூரிகளில் இதற்குரிய மாதிரிகளை நேர்த்தியாக எடுக்கும் வகையில் நிபுணர்களை நியமிக்க அந்தந்த அதிகாரிகள் உத்தரவிட வேண்டும். இந்த சேவைக்காக அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் மாநில அரசுகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும். அவசரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் அமைச்சகத்துக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸுக்கு எதிரான போரில் அரசுக்கு உதவி செய்ய ராணுவ மருத்துவர்கள் உள்பட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் முன்வந்துள்ளார்கள். இதில் ராணுவ மருத்துவர்கள், ஓய்வுபெற்ற மருத்துவர்கள், தனியார் மருத்துவர்கள் என பலரும் தன்னார்வமாக முன் வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT