Published : 12 Apr 2020 09:28 AM
Last Updated : 12 Apr 2020 09:28 AM
முன் கூட்டியே திட்டமிட்டு லாக்-டவுன் என்ற முழு அடைப்பு மற்றும் ஊரடங்கைக் கடைப்பிடிக்காமல் போயிருந்தால் ஏப்ரல் மாதம் 15ம் தேதி வாக்கில் இந்தியாவில் சுமார் 8 லட்சம் பேருக்கு கரோனா தொற்று பரவியிருக்கும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தில் செய்தித் தொடர்பாளர் லால் அகர்வால் காட்டிய வரைபடத்தில் 3 வளைகோடுகள் இருந்தன. ஒன்று சிகப்பு வளைகோடு இது லாக் டவுன், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லை எனும்போது நிலவரம் என்ன என்பதைக் குறிக்கிறது. இது ஏப்ரல் 9ம் தேதி வாக்கில் 2,08,544 கரோனா கேஸ்கள் என்று கணித்ததைக் காட்டுகிறது. இதே விரிவாக்கம் செய்தால் ஏப்ரல் 15ம் தேதி வாக்கில் 8.2 லட்சம் பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
மற்றொரு வளைகோடு நீல நிறத்தில் இருக்கிறது, இது ஏப்ரல் 11 வாக்கி 45, 370 கேஸ்கள் என்று காட்டுகிறது. மேலும் ஏப்ரல் 15 ஆக்கில் 1.2 கரோனா கேஸ்கள் என்று தெரிவிக்கிறது. இந்த நீலக்கோடு குறிப்பது என்னவெனில் கரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உள்ளது ஆனால் லாக்-டவுன் இல்லை என்ற நிலவரத்தைக் குறிக்கிறது. கடைசி வளைகோடான பச்சை நிற கோடு தற்போதைய நிலவரமான 7,447 கரோனா பாதிப்பைச் சுட்டுகிறது.
எனவே, “லாக்-டவுன் மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் கோவிட்-19 க்கு எதிராக மிக முக்கியமானவை ஆகும். ஏப்ரல் 11ம் தேதியன்று நாம் 2 லட்சம் கரோனா தொற்று என்ற நிலையில் இருந்திருப்போம்.” என்றார்.
இன்னொரு ஐசிஎம்ஆர் ஆய்வு இந்த வாரத்தில் வெளியிடப்பட்டது, அதில் சுவாசப்பாதையில் கடும் பிரச்சினைகள் உள்ளவர்களில் 40% கேஸ்களிலிருந்து சேகரிக்கப்பட்ட சாம்பிள்கள் மற்றும் கோவிட் -19 உறுதியானவற்றில் இவர்களது கரோனா தொடர்பு வரலாற்றை தடம் காண முடியவில்லை என்று கூறியுள்ளது. இதுவரை 1,71, 718 சாம்பிள்கலை சோதித்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16,564 சாம்பிள்கள் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளன.
ஒரு பகுதியில் கரோனா தொற்று ஒருவருக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்தப் பகுதியிலிருந்து 3 கிமீ தூரம் ‘தடுப்பு பிரதேசம்’ என்று கருதப்படுகிறது. 5 கிமீ பகுதி பாதுகாப்புப் பகுதியாகக் கருதப்பட்டு அங்கு நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு சந்தேக கரோனா நோயாளிகள் தடம்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்ரனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT