Last Updated : 11 Apr, 2020 05:19 PM

1  

Published : 11 Apr 2020 05:19 PM
Last Updated : 11 Apr 2020 05:19 PM

இதிலுமா உ.பி. கண்டிப்பு, தண்டிப்பு? -  லாக்-டவுன்  மீறல் 568 பேர் கைது, ரூ. 13 லட்சம் அபராதமாக வசூலிப்பு

சிஏஏ எதிர்ப்பு கலவரங்கள், வன்முறைகள் ஆகியவற்றிலும் நடவடிக்கைகளில் கண்டிப்புக் காட்டிய உத்தரப்பிரதேச மாநிலம் தற்போது கரோனா வைரஸ் லாக் டவுன் காலத்திலும் கடும் நடவடிக்கைகளை எடுப்பதில் கண்டிப்பு காட்டி வருகிறது.

வன்முறையில் ஈடுப்பட்டவர்களிடமே பொதுச்சொத்து சேத இழப்பீட்டை வசூலிக்கும் நடைமுறையைக் கையாண்ட உ.பி. தற்போது லாக் டவுன் அபராதத்தையும் வசூலித்து வருகிறது.

ஏற்கெனவே நேம் அண்ட் ஷேம் விவகாரத்தில் சிஏஏ போராட்டத்தின் போது ன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கோர்ட் கேஸ் இருக்கும் போதே அவர்கள் புகைப்படத்தை வெளியிட்டு அவமானப்படுத்தியதில் கோர்ட் விமர்சனத்தையும் எதிர்கொண்டது. ஆனால் மசியவில்லை.

இதுவரை லாக் டவுன் மீறல்களுக்காக் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 568 பேர் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக பாதவ்ன் மாவட்டத்தில் கைது எண்ணிக்கை அதிகம்.

மேலும் லாக் டவுன் உத்தரவுகளை மீறி தெருவில் வாகனங்களில் சுற்றியவர்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதித்ததன் மூலம் ரூ.13 லட்சம் திரட்டியுள்ளது உத்தரப் பிரதேச மாநிலம்.

எந்த ஒரு மாநிலமும் இதுவரை அபராதம் விதித்து இவ்வளவு தொகை வசூலித்ததாகத் தெரிவித்ததில்லை.

ஏப்ரல் 10ம் தேதி வரை 171 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 568 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 470 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அதாவது தொற்று நோய்ச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் உயரதிகாரி குமார் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை மட்டும் 10 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், ரூ.13 லட்சத்துக்கும் அதிகமாக அபராதத் தொகை வசூலாகியுள்ளது என்கிறது உ.பி. போலீஸ்.

மக்கள் ஏற்கெனவே வேலை இல்லாமல் கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது அவர்களை தண்டிக்கும் விதமாக அபராதம் விதிக்கலாமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x