Published : 11 Apr 2020 02:59 PM
Last Updated : 11 Apr 2020 02:59 PM
அமெரிக்கா கேட்டவுடன் மலேரியா காய்ச்சலுக்கு எதிரான, தற்போது கோவிட்-19 வைரஸ் காய்ச்சலுக்கு பயன்படும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் ஏற்றுமதியை ட்ரம்ப் கேட்டவுடன் அனுமதித்தது, அதே போல் பிரேசிலுக்கும் அனுப்பியது, தற்போது அனல்ஜெசிக் மாத்திரையான காய்ச்சல் நீக்க மாத்திரையான பாரசிட்டமால் பாக்கெட்டுகள் 3மில்லியன் அளவுக்கு பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
இந்த ஏற்றுமதி பிரிட்டனிடம் நாளை (ஞாயிறன்று) சென்றடையும். இதனையடுத்து ‘இந்த முக்கியமான ஏற்றுமதி’க்கு பிரிட்டன் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
தெற்காசியாவுக்கான பிரிட்டன் அமைச்சர் லார்ட் தாரிக் அகமெட் இந்த ஏற்றுமதி ‘இருநாட்டு ஒற்றுமைக்கு ஒரு குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்தது’ என்று தெரிவித்துள்ளது.
“பிரிட்டனும் இந்தியாவும் தொடர்ந்து கோவிட்-19க்கு எதிரான போரில் கூட்டிணைந்து செயலாற்றும், இந்தியாவுக்கு என் மனமார்ந்த நன்றி” என்றார் தாரிக் அகமெட்.
இந்த பாராசிட்டமால் மாத்திரைகள் ஞாயிறன்று பிரிட்டனை வந்தடையவுள்ளன. இதோடு இந்தியாவில் சிக்கியுள்ள பிரிட்டன் நாட்டுக்காரர்களும் நாளை தனி விமானங்களில் லண்டன் செல்கின்றனர்.
இந்தப் பயணத்தில் கோவா, மும்பை, டெல்லி, அமிர்தசரஸ், அகமதாபாத், திருவனந்தபுரம் ஆகிய ஊர்களிலிருந்து லண்டன் செல்கின்றனர் பிரிட்டன் நாட்டவர்கள். இவர்களுக்கு முதலில் கரோனா தொற்று இருக்கிறதா என்ற சோதனைகளுக்குப் பிறகே விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவார்கள். அங்கு இறங்கிய பிறகு சுய தனிமைக் கட்டுப்பாடுகளை இவர்கள் கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
இந்தியாவில் சுமார் 21,000 பிரிட்டன் நாட்டவர்கள் உள்ளனர். இதில் 5, 000 பேர் திரும்பிச் செல்கின்றனர். இதற்காக 19 தனி விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த விமானங்களில் செல்ல பயணிகள் 600-650 பவுண்ட் கட்டணம் செலுத்த வேண்டும், நிதி நெருக்கடியில் உள்ளவர்கள் வட்டியில்லா கடன் பெற்று 6 மாதத்தில் செலுத்துமாறு வசதி செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி பிரிட்டன் கரோனா பலி எண்ணிக்கை 8,000 ஆக அதிகரித்துள்ளது, உறுதி செய்யப்பட்ட கரோனா தொற்று எண்ணிக்கை 65,000 ஆக அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT