Published : 11 Apr 2020 10:26 AM
Last Updated : 11 Apr 2020 10:26 AM
இந்தியாவை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் நாளுக்கு நாள் உயிரிழப்பும், பாதிகப்பட்டோர் எண்ணி்க்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் நாடுமுழுவதும் 40 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர், ஆயிரத்து 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா பாதிப்பு ஏற்பட்ட நாளிலிருந்து இதுவரை ஒரே நாளில் ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் முறையாகும்.
கரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 239 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 447 ஆகவும் அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் 6,565 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 643 பேர் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து கரோனா வைரஸால் 33 பேர் உயிரிழந்துள்ளார்கள். மத்தியப்பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 17 பேரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 13 பேரும், குஜராத்தில் 2 பேரும், அசாமில் ஒருவரும் இறந்துள்ளார்கள்
இன்று காலை 9மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை கரோனா வைரஸுக்கு அதிகமான உயிரிழப்பு நேர்ந்துள்ளது, அந்த மாநிலத்தில் நேற்று மட்டும் 13 பேர் உயிரிழந்தால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது.
அடுத்த இடத்தில் மத்தியப் பிரதேசத்தில் தலா 33 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 17 பேர் பலியாகியுள்ளாரக்ள். மூன்றாவதாக குஜராத்தில் 19 பேரும், டெல்லியில் 13 பேரும், பஞ்சாப்பில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர்
தமிழகத்தில் 8 பேரும், தெலங்கானாவில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.மேற்கு வங்கத்தி்ல் 5 பேரும், ஆந்திரா, கர்நாடகாவில் தலா 6 பேரும், உத்தரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீரில் தலா 4 பேரும், ராஜஸ்தான், ஹரியாணாவில் தலா 3 பேரும், கேரளாவில் 2 பேரும் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
பிஹார், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், அசாம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 1,574 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 188 பேர் குணமடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 911 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 44 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லியில் 903 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 பேர் குணமடைந்துள்ளனர். தெலங்கானாவில் 473 பேரும், கேரளாவில் 364 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் 431 பேரும், ராஜஸ்தானில் 553 பேரும், ஆந்திராவில் 363 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 435 பேரும், கர்நாடகாவில் 207 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 308 பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 207, மேற்கு வங்கத்தில் 116, பஞ்சாபில் 132, ஹரியாணாவில் 177, பிஹாரில் 60, அசாமில் 29, உத்தரகாண்ட்டில் 35, ஒடிசாவில் 48, சண்டிகரில் 18, சத்தீஸ்கரில் 18, லடாக்கில் 15 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்தமான் நிகோபர் தீவில் 11 பேர், கோவாவில் 7 பேர், இமாச்சலப்பிரதேசத்தில் 28 பேர், புதுச்சேரியில் 5 பேர், ஜார்க்கண்ட்டில் 14 பேர், மணிப்பூரில் 2 பேரும், மிசோரம், அருணாச்சலப்பிரதேசத்தில் தலா ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்''
இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT