Last Updated : 10 Apr, 2020 12:37 PM

1  

Published : 10 Apr 2020 12:37 PM
Last Updated : 10 Apr 2020 12:37 PM

என்னை நல்ல எண்ணத்தில் மீண்டும் பணியில் சேர அழைக்கவில்லை: மத்திய அரசின் காஷ்மீர் கொள்கையை எதிர்த்து ராஜினாமா செய்த ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் திட்டவட்டம்

கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து தன் ஐஏஎச் பதவியையே தூக்கி எறிந்த கேரளாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் மீண்டும் தன்னை பணிக்கு அழைப்பதாகவும் ஆனால் தான் மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

2012 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார் விஅர். தாத்ரா நாகர் ஹவேலியில் மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தி செயலராக நியமிக்கப்பட்டார். ஆனால் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதையடுத்து அங்கு லட்சக்கணக்கானோருக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்து பதவியையே தூக்கி எறிந்தார்.

இந்நிலையில் 34 வயது கண்ணன் கோபிநாதனை மறுபடியும் பணியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, 2018 கேரளா வெள்ளத்தின் போது இவர் செய்த அளப்பரிய பணிகளை முன்வைத்து கோவிட்-19 காலத்தில் இவர் உதவி தேவைப்படும் என்று மத்திய அரசு அழைத்துள்ளது.

ஆனால் ஐஏஸ் கோபிநாதன் கண்ணன், “என்னை மீண்டும் பணியில் சேர அழைப்பது நல்ல நோக்கத்தின்பாற்பட்டதல்ல, என்னை அழைத்து துன்புறுத்தவே மீண்டும் பணியில் சேர அழைக்கிறார்கள். சிறுமையையும் பழிவாங்கல் உணர்வையுமே நான் இதில் பார்க்கிறேன். கோவிட்-19 க்காக நான் மகாராஷ்ட்ராவில் என்னளவில் பணி செய்து வருகிறேன். இந்தப் பணி செய்வதற்கு எனக்கு ஐஏஎஸ் என்ற அட்டைத் தேவையில்லை.

இதையே தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் செய்யச் சொன்னால் செய்வேன், ஆனால் மீண்டும் ஐஏஎஸ் அதிகாரியாக மாட்டேன். இதனை மத்திய அரசுக்கு தெளிவு படுத்தி விட்டேன் என்றார்.

மேலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ராஜினாமா செய்த தனக்கு இன்னமும் ஆகஸ்ட் மாத சம்பளமே போடவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x