Published : 10 Apr 2020 08:47 AM
Last Updated : 10 Apr 2020 08:47 AM
டெல்லியில் தப்லீக்-எ-ஜமாத் மாநாட்டுக்கு வந்த முஸ்லிம்கள் டெல்லி நிஜாமுதினில் உள்ள அதன் தலைமையகத்தில் சிக்கினர். இவர்கள் அனைவரையும் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மார்ச் 27 முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரை படிப்படியாக காலி செய்தது. அவர்கள் அனைவருக்கும் கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டிருக் கின்றனர்.
இவர்களில் ஒருவரான நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் பிச்சைக்கனி (64), டெல்லியின் லோக் நாயக் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறிது நேரத்திலேயே அவர்மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த தகவல் அவரது குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டது.
தஸ்தகீரின் உடலை டெல்லியிலேயே நல்லடக்கம் செய்ய அவரது மனைவி நூர்ஜஹானின் சம்மதமும் பெறப்பட்டுள்ளது. எனினும், 12 தினங்களாக தஸ்தகீரின் உடல் இன் னும் நல்லடக்கம் செய் யப்படவில்லை.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் டெல்லி நிஜாமுதீன் ஆட்சியர் அலுவலக வட்டாரம் கூறும்போது, ‘‘உடலை சென் னைக்கு அனுப்பும்படி தஸ்தகீரின் குடும்பத்தார் முதலில் வலியுறுத்தினர். இது சாத்தியமில்லை என புரியவைத்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் மூலமாக சம்மதம் பெறவே 6-ம் தேதி ஆகிவிட்டது.டெல்லியில் உள்ள முஸ்லிம்களின் இடுகாட்டில் எங்கு அவரது உடலை நல்லடக்கம் செய்வது என்பதை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டதால் மேலும் தாமதானது. இதுவும் விரைவில் முடிந்து உடல் நல்லட க்கம் செய்யப்பட்டுவிடும்’’ எனத் தெரிவித்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் கொல்லிடத்திற்கு அருகில் உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தஸ்தகீர்.
இதனிடையே, இந்த மாநாட் டுக்கு வந்த மற்றொரு நபரான நாமக்கல்லைச் சேர்ந்த யூசூப் (36) என்பவரும் மார்ச் 31-ல் மரணமடைந்தார். இவரது உடல் அவரது குடும்பத்தார் சம்மதத்துடன் ஏப்ரல் 5 இல் டெல்லியிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT