Published : 09 Apr 2020 08:49 AM
Last Updated : 09 Apr 2020 08:49 AM

ஊரடங்கு அமலில் உள்ள காலத்திலும் தமானியின் சொத்து மதிப்பு அதிகரிப்பு

புதுடெல்லி

ஊரடங்கால் நாட்டின் பெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, ஷிவ் நாடார், உதய் கோடக் ஆகியோரின் சொத்து மதிப்புகள் பெரிதும் சரிந்துள்ளன.

ஆனால் அத்தியாவசியப் பொருள்கள் அங்காடியின் உரிமையாளரான ராதாகிருஷ்ணன் தமானியின் சொத்து மதிப்பு 5 சதவீதம் அதிகரித்துள்ளது. இவரது அவென்யூ சூப்பர் மார்க்கெட்ஸ் லிமிடெட் பங்கு விலை 5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இவரது சொத்து மதிப்பு 1,000 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

ராதாகிருஷ்ணன் தமானி, மும்பையில் ஒற்றை படுக்கை அறை குடியிருப்பில் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். 2002-ம்ஆண்டில் இந்த நிறுவனத்தின் முதலாவது விற்பனையகம் மும்பையில் பொவாய் பகுதியில் தொடங்கப்பட்டது. தற்போது இந்நிறுவனத்துக்கு 72 நகரங்களில் 196 விற்பனையகங்கள் உள்ளன.

ஊரடங்கு காரணமாக இவரது சங்கிலித் தொடர் நிறுவனங்களில் மக்கள் அத்தியாவசியப் பொருள்களை அதிக அளவில் வாங்கி வருவதால், இந்நிறுவன பங்கு விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.

டி-மார்ட் விற்பனையகங்கள் பெரும்பாலும் தனித்து இயங்குபவை. இதனால் இவற்றுக்கு மக்கள் எளிதில் வந்து செல்ல முடிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x