Published : 07 Apr 2020 03:15 PM
Last Updated : 07 Apr 2020 03:15 PM
கடினமான கரோனா வைரஸ் பரவல் காலக்கட்டத்தில் சமுதாயத்தின் மேல்தட்டில் உள்ளவர்கள் அனைவரும் தங்களால் இயன்றதை நாட்டு மக்களுகாகச் செய்து வருகின்றனர். ஆனால் அந்த உதவிகள் பயனுள்ள வகையில் இருக்க வேண்டும் என்பது அவசியம் என்பதை உணர்ந்த மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி என் - 95 முகக்கவசங்களை பெரிய அளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவப் பணியாளர்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
ராகேஷ் திவேதி ஏற்கெனவே பிரதமர் கேர்ஸ் நிதிக்கு ரூ.1 கோடி கொடுத்துள்ளார், தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை கோவிட்-19 மருத்துவ உதவிப் பணியாளர்களுக்காக 15,000 என்95 முகக்கவசங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
15,000 என்95 முகக்கவசங்கள் இன்னும் 4-5 நாட்களில் எய்ம்ஸ் மருத்துவர்கள், மருத்துவ உதவிப்பணியாளர்கள் பயனுக்காக வந்து சேர்ந்து விடும் என்கிறார் திவேதி.
எய்ம்ஸ் உடன் சேர்ந்து ஆலோசித்து இந்த நன்கொடையை அவர் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
வெள்ளை உடை போர் வீரர்களுக்கு இது ஒரு சிறிய உதவிதான், நோயாளிகளைக் காப்பற்ற இவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைக்கின்றனர், நாம் கைதட்டுதல், விளக்குகள் எரியவிடுதலிலிருந்து நகர்ந்து நாமும் இத்தகைய உதவிகளை வழங்கி சக போராளிகளாவோம், உங்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு உதவுங்கள், என்று கூறுகிறார் ராகேஷ் திவேதி.
இவர் ஏற்கெனவே ஏழை மக்கள் மற்றும் வேலையின்றி புலம்பெயரும் மக்களுக்கு உதவி புரியுங்கள் என்று அழைப்புவிடுத்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT