Published : 07 Apr 2020 02:53 PM
Last Updated : 07 Apr 2020 02:53 PM
அமெரிக்காவுக்கு இந்தியா மலேரியாக் காய்ச்சலுக்குக் கொடுக்கப்படும் தற்போது கரோனா வைரஸைத் தடுக்கப் பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ராக்சிகுளோரோகுய்னை சப்ளை செய்யவில்லை எனில் பதிலடியைச் சந்திக்க வேண்டி வரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்ததற்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
ராகுல் காந்தி விமர்சனத்தைத் தொடர்ந்து தற்போது சசி தரூர், “என்னுடைய இத்தனையாண்டுகால உலக விவகார அரசியல் அனுபவத்தில் எந்த ஒரு நாட்டின் தலைவரும் இப்படி வெளிப்படையாக இன்னொரு நாட்டை மிரட்டி நான் பார்த்ததில்லை.
இந்திய ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் எப்படி உங்கள் சப்ளை ஆகும் அதிபரே? இந்தியா உங்களுக்கு விற்க முடிவெடுத்தால்தான் அது உங்கள் சப்ளை” என்று சாடியுள்ளார்.
இன்னொரு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் கூறும்போது, “இந்தியா இத்தனையாண்டுகலாக அமெரிக்க வர்த்தகத்தின் பயன்களை அடைந்துள்ளது, எனவே ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் சப்ளை செய்யவில்லை எனில் பதிலடி எதிர்பார்க்கலாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கருத்து இந்திய-அமெரிக்க உறவுகளை வெறும் பண்டப்பரிமாற்றமாகச் சுருக்கியுள்ளதைக் காட்டுகிறது இது ஹவ்டி மோடியும் அல்ல நமஸ்தே ட்ரம்ப்பும் அல்ல என்பதை நிரூபித்து விட்டது” என்றார்
பழிக்குப் பழி என்பது நட்பு அல்ல, இந்தக் காலக்கட்டத்தில் இந்தியா அனைத்து நாடுகளுக்கும் உதவ வேண்டியுள்ளது. முதலில் உயிர்காப்பு மருந்துகள் இந்தியர்களுக்கு போதிய அளவில் கிடைக்க வேண்டும், என்று ராகுல் காந்தி முன்னதாக ட்வீட் ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT