Published : 07 Apr 2020 03:13 PM
Last Updated : 07 Apr 2020 03:13 PM
கரோனா வைரஸுக்கு எதிரான போரில் மக்களை கைதட்டச் சொல்வதாலும், வீடுகளில் விளக்கு ஏற்றச் சொல்வதாலும் நம்மால் போரில் வெல்ல முடியாது என்று சிவசேனா கட்சி காட்டமாக விமர்சித்துள்ளது.
கரோனை வைரஸ் பரவுவதைத் கட்டுப்படுத்தும் நோக்கில் முதல்கட்டமாக கடந்த மாதம் 22ம் தேதி ஜனதா ஊரடங்கை பிரதமர் மோடி அறிவி்த்தார். அன்று மாலை 5 மணிக்கு மக்கள் அனைவரும் வீட்டின் முற்றத்தில்நின்று கொண்டு கைதட்டியும், காலிங் பெல்லை அழுத்தியும், ஒலி எழுப்பியும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் ஊக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
ஆனால் இதை தவறாகப்புரிந்துகொண்ட பலர் பல்வேறு நகரங்களில் ஊர்வலமாகச் சென்று ஒலிஎழுப்பியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்த சூழலில் கடந்த 5-ம் தேதி இரவு9 மணி்க்கு, 9 நிமிடங்கள் வீட்டின் மின்விளக்குகளை அனைத்து வீட்டில் தீபம் ஏற்றி கரோனாவுக்கு எதிரான போரில் நமது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி மக்களிடம் கேட்டுக்கொண்டார்
இதையும் சிலர் தவறாகக் கையாண்டு பல்வேறு நகரங்களில் தீப்பந்தத்துடன் ஊர்வலம் சென்றது, பட்டாசுகள் வெடித்தது, உருவபொம்மை எரிப்பு உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு கண்டனத்தை வாங்கிக்கட்டினர்.
இது குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கரோனாவுக்கு எதிரான போரில் மக்களை அழைத்து கைகளை தட்டச்சொல்வதாலும், வீடுகளில் விளக்கு ஏற்றச் சொல்வதாலும் நாம் வெல்ல முடியாது. பிரதமரின் கோரிக்கைக்கு மக்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள், செயல்படுகிறார்கள் என்பதை பல கோணங்களில் பார்க்க வேண்டும்.
மக்களிடம் என்ன எதி்ர்பார்க்கிறேன் என்பதை பிரதமர் மோடி தெளிவாக தனது உரையில் குறிப்பிட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாததால் பிரதமரின் பேச்சு மக்களால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டதா அல்லது பிரதமரே அதுபோன்ற குதுகலமான சூழலை அவர் விரும்பினார என்பது தெரியவில்லை.
ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்படாதவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் சுய ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும்என்று மக்களுக்கு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெளிவாகத் தெரிவித்தார். இதில் எந்தவிதமான குழப்பமும் இல்லை.
கரோனா வைரஸுக்கு எதிரான போரில் இதுபோன்ற காமாண்டர் தேவை. வீன் வதந்திகள், திட்டமிடல் இல்லாததால்தான் நாம் பானிபட் போரில் தோற்றோம். கரோனா வைரஸுக்கு எதிரான போரும் அதுபோல் இருந்துவிடக்கூடாது, மராாத்திய தளபதி சதாசிவராவுக்கு நேர்ந்த கதி மக்களுக்கு வரக்கூடாது.
ஆதலால், மக்களிடம் என்ன எதிர்பார்க்கிறேன் என்பதை பிரதமர் மோடி தெளிவாக தனது உரையில் தெரிவிக்க வேண்டும். யாரெல்லாம் விதிமுறைகளை மீறுகிறார்களோ அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை குறிப்பிட வேண்டும்.
டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் மட்டும் விதிகளை மீறவில்லை, அவர்களை குறை சொல்பவர்களும்தான் சுயதனிமை, சமூகவிலகலை பின்பற்றுவதில்லை.
கரோனா வைரஸுக்கு எதிரானப் போில் மெழுகுவர்த்தி, விளக்கு, மொபைல் டார்ச் போன்றவற்றை எடுத்துக்கொண்டு சாலையில் நடனமாடிச் சென்றவர்களையும், பட்டாசு வெடித்தவர்களையும் கடுமையாகக் கண்டிக்கிறோம்.
அதேபோல வார்தாவில் பாஜக எம்எல்ஏ தாதாராவ் கெச்செ தனது பிறந்தநாளை இந்த நேரத்தில் 200-க்கும் மேற்பட்ட மக்களைக் கூட்டி வைத்து கொண்டாடியதும் கண்டிக்கத்தக்கது. உத்தரப்பிரதேசம் பல்ராம்பூரில் பாஜக மகளிர் அணித்தலைவியும் இதுபோல் பட்டாசு வெடித்து கொண்டியதும் கண்டிக்கத்தக்கது
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT