Published : 05 Apr 2020 05:23 PM
Last Updated : 05 Apr 2020 05:23 PM

கரோனா தொற்றுடன் பலரையும் சந்தித்து அளவளாவிய நபர்: அஸாமில் 111 பேருக்கு நோய் தொற்று அபாயம்

வர்த்தகர் ஒருவர் கரோனா நோய் பாதிப்புடன், தொற்றுடன் 111 பேர்களுடன் அளவளாவி மகிழ்ந்துள்ளது தெரியவர அசாம் சுகாதார அதிகாரிகள் 111 பேரையும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்தியுள்ளனர்.

ஆனால் இவருக்கு கரோனா தொற்று உருவாவதற்குக் காரணமான, நோயுடன் சுற்றித்திரியும் அந்த நபரைக் காணவில்லை. தடம் காண முடியவில்லை.

நோய் தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்ட வர்த்தகர் டெல்லியில் இதனால் பாதிக்கப்படவில்லை. குவாஹாத்தியில்தான் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் வாழும் பகுதியில் 150 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் வீட்டுத் தனிமையில் இருந்து வருகின்றனர். இந்த வர்த்தகருடன் தொடர்பிலிருந்த 111 பேரையும் அடையாளம் கண்டுள்ளனர். இவர்களிடமிருந்து சாம்பிள்கள் சேகரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பிப்ரவரி 29ம் தேதி இவர் டெல்லியிலிருந்து வந்துள்ளார், லாக்டவுன் மார்ச் 24ம்தேதிதான் அறிவிக்கப்பட்டது, அதற்குள் இவர் எவ்வளவு நபர்களைச் சந்தித்திருக்கிறாரோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதற்கிடையே டெல்லி மசூதி நிகழ்வில் கலந்து கொண்டு வந்தவர்கள் கரோனா நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு தர மறுத்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். 812 நிஜமுதீன் மசூதி தொடர்பான சாம்பிள்கள் பரிசோதனைக்கு அனுப்பியதில் 24 பாசிட்டிவ் என்று வந்துள்ளது என்கின்றனர் சுகாதார அதிகாரிகள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x