Published : 05 Apr 2020 09:56 AM
Last Updated : 05 Apr 2020 09:56 AM

இந்தியாவில் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது இளைஞர்களே: சுகாதாரத் துறை அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது இளைஞர்களே என அதிர்ச்சித் தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் எந்த வயதுடையோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 42 சதவீத கரோனா பாதிப்புகள் 21 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கே ஏற்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.

வைரஸ் பாதிப்பு குறித்த வயது விவரக்குறிப்பு பகுப்பாய்வை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால், வெளியிட்டார்
42 சதவீத கொரோனா பாதிப்புகள் 21 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. நடுத்தர வயதுடையவர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

9 சதவீத பாதிப்புகள் 0-20 வயதுக்கு இடைப்பட்டவை; 42 சதவீத பாதிப்புகள் 21 முதல் 40 வயது வரை-33 சதவீதம் 41 முதல் 60 வயது வரை 17 சதவீத கரோனா பாதிப்புகள் 60 வயதுக்கு மேல் உள்ளன.

நாட்டில் 2,904 கரோனா பாதிப்புகளில் 58 நோயாளிகள் ஆபத்தானகட்டத்தில் உள்ளனர். . இவற்றில் பெரும்பாலானவை மத்தியப் பிரதேசம், டெல்லி மற்றும் கேரளாவில் உள்ளன.

கரோனாவினால் மரணமடைந்தவர்களின் வயதைக் குறிப்பிட மறுத்த சுகாதாரத் துறை அவர்கள் ‘வயதானவர்கள்’ என்பதோடு நிறுத்திக் கொண்டது. மேலும் இவர்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் இருதய நோய்கள் ஏற்கெனவே இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மரணித்தோர் எண்ணிக்கை 103, இதில் மகாராஷ்ட்ராவில் அதிகபட்சமகா 32 மரணங்கள். மகாராஷ்ட்ராவில் பாதிப்பு எண்ணிக்கை 576, தமிழ்நாட்டில் 476, டெல்லியில் 431.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x