Published : 05 Apr 2020 08:06 AM
Last Updated : 05 Apr 2020 08:06 AM
கரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலானநிறுவன பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணி புரிகின்றனர். ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்றும் பரவலாக பேசப்படுகிறது. இந்நிலையில் பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்கள் 90 நாள்களுக்கு லே-ஆப் ஏதும் இல்லை என அறிவித்துள்ளன. சில நிறுவனங்கள் இந்த ஆண்டு முழுவதும் லே-ஆப் கிடையாது என தெரிவித்துள்ளன.
சில நிறுவனங்கள் புதிதாக வேலைக்கு ஆள்களை நியமிப்பதை தள்ளிப்போட முடிவுசெய்துள்ளன.
எஸ்ஏபி, மார்கன் ஸ்டான்லி, சேல்ஸ்போர்ஸ், பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ், பேபால், சிட்டி குரூப், ஜேபி மார்கன், பாங்க் ஆப்அமெரிக்கா, பூஸ் ஆலென் ஹாமில்டன் உள்ளிட்ட நிறுவனங்கள் இத்தகைய முடிவை எடுத்துள்ளன.
தங்கள் நிறுவன வளர்ச்சியில் ஊழியர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என கருதுவதால் லே-ஆப் நடவடிக்கை எதையும்எடுக்கவில்லை என ஜேபி மார்கன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவில்தான் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மிக அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் (34 ஆயிரம்) உள்ளனர்.
இதேபோல எஸ்ஏபி நிறுவனமும் 90 நாள்களுக்கு லே-ஆப் எதுவும் அறிவிக்கப்படாது என தெரிவித்துள்ளது. ஊழியர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும், நெருக்கடியான சூழலில் அவர்களை காக்க வேண்டிபொறுப்பு நிறுவனத்துக்கு உள்ளதுஎன்று நிறுவனத்தின் இந்தியப்பிரிவு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்நிறுவனத்தில் 13 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.
மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தில் 3,300 பணியாளர்கள் உள்ளனர். ஜூலை 1-ம் தேதி வரை லே-ஆப் ஏதும் இல்லை என நிறுவனம் அறிவித்துள்ளது.
கரோனா தடுப்பு காரணமாக லே-ஆப் ஏதும் நிறுவனம் மேற்கொள்ளாது என பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் தலைமைச் செயல்அதிகாரி நிகேஷ் அரோரா வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் மட்டும் இந்நிறுவனத்தில் 7 ஆயிரம்பேர் பணி புரிகின்றனர். கோவிட்நிவாரண நிதியாக 40 லட்சம் டாலர்ஒதுக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT