Last Updated : 04 Apr, 2020 03:59 PM

 

Published : 04 Apr 2020 03:59 PM
Last Updated : 04 Apr 2020 03:59 PM

உடனடியாக மிகப்பெரிய அளவில் மக்களுக்கு கரோனா பரிசோதனை அவசியம்: மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி : கோப்புப்படம்

புதுடெல்லி

லாக்டவுனிலிருந்து நமக்கு முடிவுகள், பலன்கள் கிடைப்பதற்கு மிகப்பெரிய அளவில் மக்களுக்கு கரோனா குறித்த பரிசோதனையை உடனடியாக நடத்துவது அவசியம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

உலகில் 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் 68 உயிர்கள் பலியாகியுள்ளன.

2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் குறைக்கவும், தடுக்கவும் 21 நாட்கள் லாக்-டவுனை மத்திய அரசு அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது

இந்நிலையில் லாக்-டவுனின் பலன் முழுமையாகக் கிடைக்க மக்கள் அனைவருக்கும் கரோனா குறித்த பரிசோதனை அவசியம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

மக்களில் எத்தனை பேருக்கு கரோனா வைரஸ் என்பதை அறிந்துகொள்ள மிகப்பெரிய அளவில் பரிசோதனையை நாம் உடனடியாக நடத்துவது அவசியம். இந்த பரிசோதனையின் மூலம் நாம் மிகவும் மிதிப்பு மிக்க தகவல்களான கரோனா வைரஸின் தீவிரத்தன்மை, கரோனா வைரஸின் திரள், எதைநோக்கிச் ெசல்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

இந்த லாக்டவுன் மூலம் நாம் பலன்களைப் பெறுவதற்கு, மிகப்பெரிய அளவில் மக்களுக்கு கரோனா வைரஸ் குறித்த பரிசோதனை நடத்த வேண்டும். நாட்டில் அதற்கான மருத்து கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ஆதரவளிக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பிரிவில் இருக்கும் ெசவிலியர்கள், மருத்துவப்பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசம் இல்லை, அவர்களின் ஊதியமும் குறைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் மருத்துவப்பணியாளர்கள் அனைவருக்கும் நாம் ஆதரவு அளிக்க வேண்டும்.

மக்களுக்கு அவர்கள்தான் வாழ்க்கையை மீட்டுத்தருபவர்கள், போர்க்களத்தில் சண்டையிடும் போர்வீரர்கள். உத்தரப்பிரதேசம் பந்தா நகரில் மருத்துவப் பணியாளர்களுக்கும், செவிலியர்களுக்கும் போதுமான பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் பணியாற்றுகிறார்கள், ஊதியமும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் உத்தரப்பிரதேச அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டும், போர்க்களத்தில் போரிடும் வீரர்களுக்கு அநீதிஇழைக்காமல், அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்”

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x