Published : 04 Apr 2020 08:03 AM
Last Updated : 04 Apr 2020 08:03 AM
டெல்லியில் நடந்த மதப் பிரார்த்தனைக்கு சென்றுவிட்டு ஆந்திரா திரும்பிய மகனிடம் இருந்து கரோனா வைரஸ் தொற்றியதால் அவரது தந்தை உயிரிழந்தார். ஆந்திர மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் நேரிட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் டெல்லியில் நடந்த ஒருமதப் பிரார்த்தனைக்கு சென்றுவிட்டு கடந்த மாதம் 17-ம் தேதி வீடு திரும்பினார். அப்போது முதல் அவருக்கு தொடர்ந்து இருமல், காய்ச்சல், தும்மல் போன்றவை இருந்தது. இதன் பாதிப்பு கடந்த மார்ச் 30-ம் தேதி அதிகமானதால், அவர் விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். இந்நிலையில், 55 வயதான அவரது தந்தைக்கும் கரோனாஅறிகுறி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் கடந்த 30-ம் தேதி விஜயவாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அவரது ரத்தப் பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைக்கப் பெற்றன. இதில் அவருக்கு கரோனா இருந்தது உறுதியானது. இதனை ஆந்திர அரசுஅதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதேபோல், மேலும்29 பேருக்கு கரோனா அறிகுறிகள் உள்ளதால், அவர்கள் அனைவரும் தற்போது அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, ஆந்திராவில் கரோனா பாதிப்பு 161-ஆக உயர்ந்துள்ளது. என்.மகேஷ்குமார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT