Published : 02 Apr 2020 08:55 AM
Last Updated : 02 Apr 2020 08:55 AM
அமிர்தசரஸில் உள்ள சீக்கிய புனிதத்தலமான பொற்கோயிலின் முன்னாள் ‘ஹசூரி ராகி’யும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான மதத் தலைவர் கரோனா வைரஸுக்கு பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
62 வயதான இவர் குர்பானி பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வெளிநாட்டிலிருந்து சமீபமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். இவருக்கு புதனன்று கரோனா உறுதியானது. இவர் பெயர் நிர்மல் சிங் என்று தெரிகிறது.
இவரது உடல் நிலை புதன் மாலை மோசமடைந்ததாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் டாக்டர் சுஜாதா சர்மா தெரிவித்தார், இந்நிலையில் இவர் மாலை 4.30 மணிக்கு மரணமாடைந்தார்.
இவர் குருநானக் தேவ் மருத்துவமனையில் மூச்சுத்திணறல் மற்றும் தலைசுற்றல் காரணமாக மார்ச் 30ம் தேதி அனுமதிக்கபட்டார். இந்நிலையில் ஏப்ரல் 1ம் தேதி அன்று இந்தியாவில் 3 பேர் கரோனாவினால் மரணிக்க ஒரே நாளில் 370 பேருக்கு தொற்று இருப்பதாக ரிப்போர்ட் ஆகியுள்ளது.
இதனையடுத்து இந்தியாவில் உறுதி செய்யப்பட்ட கரோனா தொற்று எண்ணிக்கை 1,637 ஆகவும் பலி எண்ணிக்கை 38 ஆகவும் உள்ளது. சுமார் 132 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இது வரை 49,751 சாம்பிள்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 861 சாம்பிள்கள் தனியார் சோதனைக்கூடங்களிலும் 126 சாம்பிள்கள் ஐசிஎம்ஆர் சோதனைச்சாலைகளிலும் நடத்தப்பட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT