Published : 02 Apr 2020 08:42 AM
Last Updated : 02 Apr 2020 08:42 AM
மத்திய பிரதேச மாநிலத்திலும் கரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரஸைக் கட்டுப்படுத்த நிதியுதவி அளிக்கும்படி பொது மக்களுக்கு மாநில அரசு வேண்டு கோள் விடுத்திருந்தது. அந்தச் செய்தியை விதிஷா நகரைச் சேர்ந்த சல்பா உஸ்கர் என்ற 82 வயது மூதாட்டி அறிந்தார். இவர் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்கு உதவ, தன்னுடைய ஓய்வூதியத் தில் இருந்து ரூ.1 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார். இத்தகவலை அரசு அதிகாரிகள் நேற்று உறுதி செய்தனர்.
இதுகுறித்து மூதாட்டி சல்பா உஸ்கர் கூறும்போது, ‘‘கரோனா ஒழிப்புக்கு உதவ முடிவெடுத்தேன். தற்போது நாடு முழுவதும் அமலில் உள்ள முழு அடைப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறேன். அரசு வெளியிடும் உத்தரவுகளை மதித்து பின்பற்ற கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார்.
இவர் வேண்டுகோள் விடுக் கும் வீடியோவை, ம.பி. மக்கள்தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போதுவைரலாகி உள்ளது. அந்த வீடியோவை முதல்வர் சிவ்ராஜ் சவுகான் தனது ட்விட்டர் பக்கத்தில்பகிர்ந்துள்ளார்.
சிறுவன் உடைத்த உண்டியல்
மிசோரம் மாநிலத்தின் கோலாசிப் நகரைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ரோமல் லால்முவான் சங்கா. இந்த சிறுவன் தனது உண்டியலை உடைத்து அதில் இருந்து ரூ.333 சேமிப்பு பணத்தை உள்ளூர் கிராம அலுவலர்களிடம் வழங்கி உள்ளான்.
சிறுவனுடைய மனிதாபி மானத்தை முதல்வர் ஜோரம் தங்கா உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT