Published : 01 Apr 2020 10:29 AM
Last Updated : 01 Apr 2020 10:29 AM
கரோனா வைரஸ் (கொரோனா, கோவிட்-19) இந்தியாவில் தொற்றியுள்ளோர் எண்ணிக்கை மார்ச் 31 நிலவரபப்டி 1,500-ஐக் கடந்தது என்றும் பலி எண்ணிக்கை 49 என்றும் சுகாதார அமைச்சகம் மற்றும் மாநில அரசுகளின் தரவுகள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுதும் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்தையும் கடந்தது. பலி எண்ணிக்கை 42,000 த்தையும் கடந்து கொரோனா கோரத்தாண்டவத்தை நடத்தி வருகிறது.
டெல்லி அரசு மருத்துவமனை மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தூரில் 19 புதிய கரோனா தொற்றுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை ம.பி.யில் 63 ஆக அதிகரித்துள்ளது.
ராஜஸ்தானில் இன்று காலை 9 மணி வரை புதிய கரோனா தொற்று எதுவும் இல்லை. இம்மாநிலத்தில் மொத்தமாக 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி மசூதியில் வழிபாட்டுக்காக கூடியதாகக் கூறப்படுபவர்களில் வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களால் பாதிப்பு 128 என்று அரசு தரப்பு செய்திகள் தெரிவிகின்றன.
தப்ளிக் மசூதி விவகாரத்தில் 2,137 பேரை அடையாளம் கண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.. இவர்கள் பல்வேறு மாநிலங்களில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT