Published : 31 Mar 2020 10:12 PM
Last Updated : 31 Mar 2020 10:12 PM
டெல்லியில் தப்லிக் ஜமாத் அலுவலகத்தை மூடி ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும் எனக் அதன் நிர்வாகிகளுக்கு போலீஸார் எச்சரிக்கை விடுத்y வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.. .
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் இந்த மாதம் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மத வழிபாடு மாநாடும் தப்லிக் ஜமாத் சார்பில் நடந்தது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், வெளிநாடுகளில் இருந்து 250-க்கு மேற்பட்டோரும் இதில் பங்கேற்றனர். ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் பேர் வரை வந்து சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்தநிலையில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கடந்த 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துவிட்டது.
கரோனா வைரஸைத் தடுக்க சமூக விலக்கல் தேவை என்பதால், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து மக்கள் வீட்டுக்குள்ளே இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
அப்போதே அனைத்து தங்கும் விடுதிகள், உணவகங்கள், விருந்தினர் இல்லம், விடுதிகள் போன்றவற்றின் உரிமையாளர்கள் கூட்டம் கூடவிடாமல், சமூக விலக்கலைப் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்தநிலையில் நிஜாமுதீன் மர்காஸ் கட்டிடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடியிருந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான கரோனா நோயாளிகள் இங்கு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்றுச் சென்றவர்களில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கூட்டி மாநாடு நடத்திய நிஜாமுதீன் மர்காஸ் மவுலானா சாத் கந்தால்வி மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த கட்டிடத்தில் தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அங்கிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களையும் மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்துதல் மையங்களில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
முன்னதாக மர்காஸைாவை உடனடியாக மூட வேண்டும் என போலீஸார் கூறியுள்ளனர். ஆனால் அதற்கு சில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் கண்டிப்பாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோவையும் போலீஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
#WATCH Delhi Police release a video of its warning to senior members of Markaz, Nizamuddin to vacate Markaz & follow lockdown guidelines, on 23rd March 2020. #COVID19 pic.twitter.com/2evZR6OcmB
— ANI (@ANI) March 31, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT