Published : 31 Mar 2020 03:13 PM
Last Updated : 31 Mar 2020 03:13 PM
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அச்சம் காரணமாக கடைகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர்.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் நோயாளிகள் பலர் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து வருகின்றனர். இதுபோன்றவர்களில் பெங்களூருவைச் சேர்ந்த வெங்கர ராகவாவும் ஒருவர்.
கரோனா தொற்று பாதிப்பில் இருந்து தற்போது பூரணமாக குணமாகியுள்ள வெங்கர ராகவா இதுகுறித்து கூறுகையில் ‘‘கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த நான் தற்போது முழுமையாக குணமாகி விட்டேன்.
முழுமையாக நலம் பெற்றுள்ளதை என்னால் உணர முடிகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு ஹீத்ரூ விமான நிலையம் வழியாக சென்றேன். அப்போது பல பயணிகளுடன் செல்லும் ஏற்பட்டது. அப்போது கரோனா வைரஸ் என்னை தொற்றியதாக தெரிகிறது.
கரோனா வைரஸ் பாதித்தபோது சாதாரண காய்ச்சல் போன்று தான் இருந்தது. என்னை தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். நான் பீதியடையவில்லை. மற்ற நோயாளிகளை எப்படி மருத்துவர்களும், செவலியரும் பார்த்துக் கொள்வார்களோ அதுபோன்று கரோனா மருத்துவமனைகளில நிலைமை இருக்காது.
அதற்கு பதிலாக ஒருவரே உங்களை முழுமையாக கவனித்துக் கொள்வார். அப்படியே என்னை கவனித்துக் கொண்டனர். தற்போது நான் முழுமையாக குணமடைந்துள்ளேன். மக்கள் பீதியடைய வேண்டாம்’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT