Published : 31 Mar 2020 08:47 AM
Last Updated : 31 Mar 2020 08:47 AM

பிரதமர் தேசிய நிவாரண நிதி இருக்க எதற்காக இப்போது  ‘பிரதமர் கேர்ஸ் நிதியம்?’- மோடிக்கு காங்கிரஸ் கேள்வி

பிரதமர் தேசிய நிவாரண நிதி என்ற ஒன்று ஏற்கெனவே பேரிடர் நிதி நிவாரணத்துக்காக இருக்கும் போது எதற்காக தற்போது பிரதமர் கேர்ஸ் (PM CARES Fund)என்ற புதிய நிதியத்தை உருவாக்க வேண்டும், என்ன அவசியம்? இதற்கு பிரதமர் மோடி காரணங்களை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டியுள்ளது என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், மற்றொரு ட்வீட்டுக்கு தனது கருத்தாக, பின்னூட்டமாக பிரதமர் கேர்ஸ் குறித்துப் பதிவிடுகையில், “பிரதமர் தேசிய நிவாரண நிதியை பிரதமர் கேர்ஸ் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டியதுதானே. வார்த்தைகளின் முதல் எழுத்தை தொகுத்துச் கவர்ச்சிக்காக சுருக்கமாக பெயர் வைப்பதில் பிரதமருக்கு பேரார்வம் அதிகம் என்பது சரி, ஆனால் எதற்காக புதிய நிதியம்? எதற்காகப் பொது அறக்கட்டளை ஏற்படுத்த வேண்டும்? அதுவும் அதன் விதிமுறைகள் பற்றி மூடுமந்திரமாக வைத்துக் கொண்டு?, நாட்டின் பிரதமரே இதற்கு நீங்கள் பதிலளிக்க வேண்டியுள்ளது. என்று கூறியுள்ளார்.

மார்ச் 28ம் தேதி மத்திய அரசு ‘பிரதமர் குடிமக்கள் அவசரகால நிதியம்’ (Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund’-PM CARES Fund) என்பதை உருவாக்கியது. இதில் குடிமக்கள் தங்கள் பங்களிப்பைச் செய்யலாம் என்று அறிவித்தது.

ஆனால் பிரதமர் தேசிய நிவாரண நிதியில் உள்ள தொகையையே இன்னும் செலவு செய்யவில்லை , டிசம்பர் 16, 2019 நிலவரத்தின் படி அதில் இருக்கும் ரூ.3,800 கோடி தொகையே செலவழிக்கப்படவில்லை. இந்நிலையில் ஏன் பிரதமர் கேர்ஸ் தொடங்க வேண்டும். ஏன் பிரதமர் மற்றும் 3 அமைச்சர்கள் மட்டும் அதில் இருக்க வேண்டும். எதிர்க்கட்சியினர், குடிமைச் சமூக உறுப்பினர் இல்லாத ஒரு அறக்கட்டளை ஏன்? என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சல்மான் அனீஸ் சோஸ் கேட்டுள்ளார்.

வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹாவும் இதனை விமர்சித்துக் கேள்வி எழுப்பிய போது, “இது மிகவும் முக்கியமான ஒரு நூலிழை. பிரதமர் தேசிய நிவாரண நிதி ஏற்கெனவே இருக்கும் போது என் இந்த சுய-மோக பெயர் பிரதமர் கேர்ஸ்? பெரிய அளவிலான தேசிய துயரத்தைக் கூட ஆளுமை வழிபாட்டுக்காகப் பயன்படுத்தத்தான் வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x