Published : 30 Mar 2020 06:53 PM
Last Updated : 30 Mar 2020 06:53 PM
பாஜா தொண்டர்கள் அனைவரும் பிரதமர் கரோனா நிதிக்கு தலா 100 ரூபாய் அனுப்ப வேண்டும் என அக்கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 900-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்திருப்பதால், இந்தியா முழுவதும் அத்தியாவசிய பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணிகளுமே நடக்கவில்லை.
இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான செலவுகள் என பல்வேறு சிக்கல்களில் தற்போது இந்தியா சிக்கியுள்ளது. இதனைச் சமாளிக்க PM CARES Fund-க்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் மோடி தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மூலமாக ட்வீட் செய்தார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அறிவித்த வங்கிக் கணக்கிற்குப் பலரும் நிதியுதவி அளிக்கத் தொடங்கினர். பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் என உதவிகள் செய்யத் தொடங்கியுள்ளனர்
இந்தநிலையில் பாஜா தொண்டர்கள் அனைவரும் பிரதமர் கரோனா நிதிக்கு குறைந்தபட்சம் ரூ.100 யாவது அனுப்ப வேண்டும் என அக்கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
#WATCH Delhi: Bharatiya Janata Party (BJP) National President Jagat Prakash Nadda requests party workers to contribute Rs 100 each to #PMCARES fund. pic.twitter.com/MaQJjpmz4L
— ANI (@ANI) March 30, 2020
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘‘நாடுமுழுவதும் பெரிய அளவில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடந்து வரும்நிலையில் பிரதமர் மோடியின் முயற்சிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பாஜக தொண்ட்ரகளும் தங்களால் இயன்ற நிதியை பிரதமர் நிதிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் நூறு ரூபாயாவது அனுப்பி வைக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT