Published : 29 Mar 2020 05:31 PM
Last Updated : 29 Mar 2020 05:31 PM

ஊரடங்கு; தொழிலாளர்களுக்கு கட்டாயம் சம்பளம்: யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்

லக்னோ

ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் உத்தர பிரதேசத்தில் தொழில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கான சம்பளத்தை கண்டிப்பாக வழங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடரந்து உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் 21 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடைகள் அடைக்கப்பட்டு, தொழிற்சாலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருமளவில் பாதிக்கும் என்ற கவலை எழுந்துள்ளது. வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு நிதித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் தொழிலாளர்களுக்கு நிறுவனங்கள் சம்பளம் வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் உத்தர பிரதேசத்தில் தொழில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கான சம்பளத்தை கண்டிப்பாக வழங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவி செய்ய வேண்டிய கடமை தொழிலதிபர்களுக்கும் உண்டு. யாரும் பணியாற்ற முடியாத சூழல் நிலவும் நிலையில் இதற்காக தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது. தொழிலாளர்கள் சமூகத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் முதுகெலும்பு. எனவே தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நாட்களுக்கும் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்பட வேண்டும்’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x