Published : 28 Mar 2020 03:58 PM
Last Updated : 28 Mar 2020 03:58 PM
ஊரடங்கு உத்தரவால் நகரங்களில் தவிக்கும் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப 1000 சிறப்பு பேருந்துகளை உ.பி. அரசு இயக்குகிறது. இந்த பேருந்துகளில் ஊர்களுக்கு செல்ல கூட்டம் அலைமோதுகிறது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
பல மாநிலங்களில் அவர்கள் உள்ளூர் போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்வதுடன் சிலர் நடந்த செல்கின்றனர். இதுபோன்ற பிற மாநிலங்களில் பணியாற்றிய உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் நகரங்களில் குவிந்து வருகின்றனர்.
அவர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இந்தநிலையில், லக்னோ, கான்பூர், மீரட் உட்பட முக்கிய நகரங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு தொழிலாளர்களுக்காக சிறப்பு பேருந்துகளை உ.பி. அரசு இயக்குகிறது.
#WATCH Huge gathering at Ghazipur near Delhi-Uttar Pradesh border as people wait to board special buses arranged by UP govt for their native districts in Uttar Pradesh. #CoronavirusLockdown pic.twitter.com/PgVM6eSank
1000 பேருந்துகள் இதுபோன்ற இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் ஊர்களுக்கு செல்ல மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக டெல்லியையொட்டியுள்ள மேற்கு உத்தர பிரதேசத்தில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT