Published : 27 Mar 2020 07:57 AM
Last Updated : 27 Mar 2020 07:57 AM
கரோனா வைரஸ் பாதிப்புக்குப் பிறகு உலகம் முழுவதும் கை கழுவும் விஷயம் மிக முக்கிய இடம்பிடித்துள்ளது. எனினும், பல நாடுகளில் கை கழுவும் விஷயத்தில் மக்கள் இன்னும் அலட்சியமாகவே உள்ளனர்.
உலகளவில் கை கழுவும் விஷயத்தில் கவனம் செலுத்தும் நாடுகள் குறித்து பிரிட்டனில் உள்ள பிர்மிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:
கை கழுவும் விஷயத்தில் சவுதி அரேபிய மக்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். அங்கு 97 சதவீத மக்கள் கை கழுவும் பழக்கம் உள்ளவர்கள். வெறும் 3 சதவீத மக்கள் மட்டுமே கைகழுவும் பழக்கத்தில் இல்லை என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அதற்கடுத்து இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவதில் போஸ்னியா, அல்ஜீரியா, லெபனான், பபுவா நியூ கினியா ஆகிய நாட்டு மக்கள் உள்ளனர்.
கழிவறை சென்றுவிட்டு வெளியில் வந்தால் கை கழுவ வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் 50 சதவீத மக்கள் இருக்கின்றனர். இந்தப் பட்டியலில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது. சீனா (77 சதவீத மக்கள் கை கழுவுவதில்லை), ஜப்பான், தென் கொரியா, நெதர்லாந்து, தாய்லாந்து, கென்யா, இத்தாலி, மலேசியா, ஹாங்காங், இந்தியா ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் உள்ளன.
பாகிஸ்தான் 16-வது இடத் திலும், ஆப்கானிஸ்தான் 25-வது இடத்திலும் வங்கதேசம் 26-வது இடத்திலும் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT