Published : 02 May 2014 09:32 AM
Last Updated : 02 May 2014 09:32 AM

தேசத்தைக் கொள்ளையடித்தவர்களுக்கு வாக்களிக்காதீர்: ஆந்திரத்தில் மோடி பிரச்சாரம்

தேசத்தை கொள்ளை அடித்த காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

சீமாந்திராவில் வரும் 7-ம் தேதி சட்டப்பேரவை மற்றும் மக்களவைக்கான தேர்தல் கள் நடைபெறவுள்ளன.

இதனையொட்டி பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, புதன்கிழமை இரவு திருப்பதியிலும் அதனை தொடர்ந்து வியாழக்கிழமை சித்தூர் மாவட்டம் மதனபள்ளி, நெல்லூர், குண்டூர், பீமாவரம், விசாகபட்டினம் ஆகிய சீமாந்திரா பகுதிகளிலும் பிரச்சாரம் மேற் கொண்டார்.

இவருடன், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, வெங்கைய நாயுடு, நடிகர் பவன் கல்யாண் மற்றும் பா.ஜ.க. ஆந்திர மாநில பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நெல்லூர் பிரச்சாரத்தின் போது, நரேந்திர மோடி முதலில் தெலுங்கில் பேசி அனைவரையும் கவர்ந்தார். அவர் பேசியதாவது:

நமது நாட்டை முதலில் ஊழலில் இருந்து காப் பாற்றி வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவேண்டும். பா.ஜ.க. கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தவுடன் ஊழல் முற்றிலு மாக ஒழிக்கப்படும். காரணம், நான் லஞ்சம் வாங்க மாட்டேன் மற்றவர்களையும் வாங்க விட மாட்டேன். தற்போதுள்ள நாட்டின் சூழ்நிலையில், மத்தியிலும் மாநிலத்திலும் நிலையான ஆட்சி அமைய வேண்டும்.

இதற்காக பா. ஜ.க கூட்டணியை ஆதரியுங்கள். ஆந்திர மாநிலத்தில் அரசியல் அனுபவம் மிக்க சந்திரபாபு நாயுடுவினால்தான் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியும். ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றவர்களுக்கு மறந்தும் கூட வாக்களிக்கவேண்டாம். ஏ.சி அறையில் உட்கார்ந்து கொண்டு கருத்து கணிப்பு நடத்துபவர்களின் கணக்குகளுக்கு அப்பாற்பட்டது இந்த தேர்தல்.

டெல்லியில் மீண்டும் தாய் - மகன் ஆட்சி அவசியமா, ரிமோட் கன்ட்ரோல் ஆட்சி நமக்கு தேவை தானா என காங்கிரஸை விமர்சித்து பொதுமக்களிடம் கேள்வி கேட்டார். இதற்கு பொது மக்கள் 'வேண்டாம்' என பலமாக குரல் கொடுத்தனர்.

முன்னதாக, மோடி, சந்திர பாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகி யோர் வியாழக்கிழமை காலை திருமலைக்கு சென்று ஏழுமலை யானை தரிசித்தனர். அவர்களை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசன ஏற்பாடுகள் செய்தனர். மோடி யின் வருகையையொட்டி சுமார் 2 மணி நேரம் திருமலைக்கு போக்குவரத்து, மற்றும் தரிசனம் நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர் கள் மிகவும் அவதிப்பட்டனர்.

தொடர்ந்து அவர்கள் திருப்பதி யில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காளஹஸ்திக்கு சென்றனர். அங்கு, சிவன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். இக்கோயிலிலும் சுமார் 2 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்பட்டது. ராகு-கேது சிறப்பு பூஜைகளும் நிறுத்தப்பட்டதால் பல வெளி மாநில பக்தர்கள் அவதிக்குள்ளானார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x