Published : 26 Mar 2020 06:58 PM
Last Updated : 26 Mar 2020 06:58 PM
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடைகளில் சமூக விலகலை கடைபிடிப்பது தொடர்பாக நேரடியாக சென்று பயிற்சி அளித்தார்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அச்சம் காரணமாக கடைகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர்.
இதற்கு ஏற்றவகையில் கடைகளுக்கு முன்பு உரிய வகையி்ல் மக்கள் இடைவெளி விட்டு நிற்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டுள்ளன. அந்த வட்டங்களில் வரிசைப்படி நின்று மக்கள் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
இதுபோலவே பலசரக்கு மற்றும் காய்கறிகள் வாங்குபவர்களும் சமூக இடைவெளியை கடைபிடித்து வாங்கிச் செல்கின்றனர். தெருவோரங்களில் கடை நடத்துபவர்களிடம் பொருட்கள் வாங்கவும் இதே நடைமுறையை போலீஸார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடைகளில் சமூக விலகலை கடைபிடிப்பது தொடர்பாக கொல்கத்தாவில் இன்று நேரடியாக சென்று பயிற்சி அளித்தார்.
#WATCH West Bengal Chief Minister Mamata Banerjee seen directing officials and vendors to practice social distancing, in a market in Kolkata. #COVID19 pic.twitter.com/dwkDbvcraR
போலீஸார், கடைக்காரர்கள் மற்றும் மக்களுக்கு அவர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை செய்து காண்பித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT