Published : 26 Mar 2020 01:00 PM
Last Updated : 26 Mar 2020 01:00 PM

காவல்துறையினர் மீது தாக்குதல்: ஹர்பஜன் சிங் சாடல்

ஊரடங்குப் பணிகளின் போது காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை, ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பதிவில் கண்டித்துள்ளார்.

கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதில் முக்கியக் கட்டமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனைப் பொருட்படுத்தாது பல்வேறு மாநிலங்களில் மக்கள் வெளியே வந்தனர். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். அப்போது சிலர் மீது காவல் துறையினர் லேசாக அடித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதன் வீடியோ பதிவுகள் ட்விட்டர் தளத்தில் உலவி வருகின்றன.

அவ்வாறு காவல்துறையினர் எச்சரித்தபோது, சிலர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தச் செயலுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

"காவல்துறையின் மீது நமக்கிருக்கும் அபிப்ராயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். நமது உயிரைக் காப்பாற்ற அவர்கள் உயிரை ஆபத்தில் வைக்கிறார்கள் என்பதை மறக்காதீர்கள். அவர்களுக்கும் குடும்பங்கள் உள்ளன. ஆனால், நாட்டுக்காக அவர்களது கடமையைச் செய்கிறார்கள். நாம் ஏன் வீட்டிலிருந்து, எதிர்காலம் சிறக்க அர்த்தத்துடன் நடந்துகொள்ளக் கூடாது? தயவுசெய்து விவேகத்துடன் இருங்கள்".

இவ்வாறு ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார்

— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 26, 2020

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x